நோய்களின் வகைகள்

 

உடலின் இயக்கம் முழுமையாக நடைபெறாமல், முழுமையான உடலின் இயக்கத்துக்கு தடை உண்டாவதே நோயென கருதப்படுகிறது. நோய்கள் பல்லாயிரம் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் உண்மையில் நோய்கள் என்பன:

1. தவறான உணவு முறைகள், தவறான வாழ்க்கை முறைகள், மற்றும் தவறான பழக்க வழக்கங்களினால் உடலில் சேரும் கழிவுகள்.

2. உடலில் கழிவுகள் அதிகரிப்பதனால் இரத்தத்தில் கலக்கும் மேலும் அதிகரிக்கும் கழிவுகள் மற்றும் விஷத்தன்மையுடைய கூறுகள்.

3. உடலில் அதிகரிக்கும் கழிவுகளால் உடல் பலகீனமாகி, அதனால் உண்டாகும் உடலின் இயக்க தடைகள்.

4. உடலின் இயக்க தடைகளினால் உண்டாகும் வலிகள், வேதனைகள் மற்றும் பலவீனங்கள்.

5. கழிவு அதிகமாக சேருவதனால் உண்டாகும் உடல் உறுப்பு பாதிப்புகள்.

6. தவறான உணவு முறைகளினால் உண்டாகும் அஜீரணம்.

7. அஜீரணத்தினால் உண்டாகும் உடலின் ஆற்றல் குறைபாடுகள்.

8. ஆற்றல் குறைபாடுகளினால் உண்டாகும் உறுப்புகளின் இயக்க குறைபாடுகள்.

9. அஜீரணத்தின் காரணமாக உணவு கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் உடலில் தேங்குவது

10. உடலில் தேங்கும் உணவு கழிவுகள், பலவீனங்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்குவது. 

இவ்வளவுதான் நோய்கள், மேலே குறிப்பிட்ட நோய் வகைகளை வாசிக்கும் போது உங்களுக்கு எந்த அச்சமும் பதட்டமும் உண்டாகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் புரியாத லத்தீன் மொழியில் தொந்தரவுக்கு ஒரு பெயர் சுட்டியதும் தானாக அச்சம் உருவாகிவிடுகிறது. 

உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளும் குணபடுத்தக் கூடியவைதான். மருத்துவர்கள் கூறும் பெயர்களை கண்டு அஞ்சாமல், உடலில் கழிவுகளை வெளியேற்றி, உடலின் ஆற்றலை அதிகரித்து, இயக்கத்தை சீர் செய்தால் அத்தனை நோய்களையும் குணபடுத்த முடியும். 


To Top