நோய்களின் தாக்கங்கள்


உடலில் சேரும் கழிவுகளும், உடலில் உண்டாகும் ஆற்றல் குறைபாடுகளும், தவறான வாழ்க்கை முறைகளும் மட்டுமே உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளுக்கும், நோய்களுக்கும், வலி வேதனைகளும் காரணமாக இருக்கின்றன. இவற்றைப் புரிந்துகொண்டு அன்றாட வாழ்க்கையில் என்னென்ன தவறுகளைச் செய்கிறோம் என்பதை கவனித்து மாற்றிக் கொண்டாலே அத்தனை தொந்தரவுகளும், நோய்களுக்கும், வலி வேதனைகளும் சுவடில்லாமல் மறைந்து போகும்.

இவற்றைப் புரிந்து கொள்ளாமல், வாழ்க்கை தவறுகளைச் சரிசெய்யாமல், இரசாயன மருந்து மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொள்வதனால் உடலின் கழிவுகள் குறைவதில்லை, ஆற்றல் குறைபாடும் சரியாவதில்லை மற்றும் நோய்களின் விஷக்கூறுகள் மறைவதில்லை. மாறாக உடலில் நோய் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று உடல் காட்டும் அறிகுறிகள் மட்டுமே மறைக்கப்படுகின்றன. உடல் காட்டும் அறிகுறிகள் மறைக்கப்படுவதனால் நோயாளிக்குத் தெரியாமலேயே நோய் வீரியமடைகிறது. 

இரசாயன மருந்து மாத்திரைகளின் மூலமாக மேலும் அதிகமான கழிவுகள் உடலில் சேருகின்றன. அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற உடலின் இயக்க ஆற்றலும் அதிகமாக விரயமாகிறது. வெளியேற்ற முடியாத இரசாயன கூறுகள் புதிய தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன.

இந்த காரணங்களால் தான் இரசாயன மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு நோய்கள் குணமாகாமல் நீடித்துக்கொண்டே போவதும், நோய்கள் மேலும் வீரியமடைவதும், புதிய புதிய நோய்கள், தொந்தரவுகள் உண்டாவதும் வாடிக்கையாக இருக்கிறது.

To Top