நோய்களை உண்டாக்கும் காரணிகள்


அஜீரணமும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர். அஜீரணமும், மலச்சிக்கலும் தான் மனிதர்கள் அனுபவிக்கும் அனைத்து நோய்களுக்கும் அனைத்து தொந்தரவுகளுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. ஜீரணம் சீர்கேடு அடைய மற்றும் மலச்சிக்கல் உண்டாக பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஜீரணம் சீர்கேடு அடைய முதல் முக்கியமான காரணம், பசியின்றி உணவை உட்கொள்வது.

2. அதிகமான காரம், இனிப்பு அல்லது புளிப்பு சுவைக்கொண்ட உணவுகளை உட்கொள்வது.

3. சமையலில் அதிகமாக மசாலா பொருட்கள், மற்றும் சுவையூட்டிகளை பயன்படுத்துவது.

4. அதிகமாக மாமிசம் மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்வது.

5. உணவை நன்றாக மெல்லாமல் விழுங்குவது.

6. பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொள்வது.

7. சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவது.

8. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்தாமல் மற்ற சிந்தனைகளில் மூழ்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, பாடல்கள் கேட்பது, வாசிப்பது, அரட்டை அடிப்பது, தொலைப்பேசியை பயன்படுத்துவது.

9. இரசாயனங்கள் கலந்த உணவுகள் அல்லது புட்டியில், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது.

10. இரவில் தாமதமாக உணவை உட்கொள்வது.

11. இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, தாமதமாக உறங்கச் செல்வது.

12. இரவு மிகக் குளிர்ந்த அறையில், அல்லது காற்றோட்டம் இல்லாத அறையில் உறங்குவது.

13. மனம் அமைதியற்று இருப்பது.

14. காலையில் தாமதமாக எழுந்திருப்பது.

15. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

 

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.