மெய்ப்பொருள் கூட்டுப் பிரார்த்தனை


பிரபஞ்சம் முழுமையும் 
படைப்புகள் யாவையும்
உயிர்கள் அனைத்தையும்
உயிர்ப்பித்து, உணவளித்து
பாதுகாத்து வழிநடத்தும்

ஆதியே! சோதியே! மெய்ச்சுடரே!

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
எல்லாம் வல்ல பேராற்றலே
பேரறிவே, கருணைக்கடலே 
மெய்ப்பொருளே!

உன்னிடமே சரணடைகிறோம் 
பாதுகாப்பு தேடுகிறோம் 
உதவியை நாடுகிறோம் 

நீயே எங்களின் 
தாயும், தந்தையும், குருவும்
தெய்வமுமாக இருந்து
பாதுகாக்க வேண்டும்
வழிநடத்த வேண்டும் 

இன்றுவரையில் நாங்கள் 
தெரிந்தோ, தெரியாமலோ
புரிந்தோ, புரியாமலோ செய்த 
அத்தனை தவறுகளையும் 
அத்தனை பாவங்களையும் 
மன்னித்து அருளவேண்டும்

இன்றுவரையில் நீ 
எங்களுக்கு அருள்செய்த 
அன்பு, பாசம், நிம்மதி, 
மகிழ்ச்சி, ஆரோக்கியம், அறிவு, 
கருணை, கல்வி, தெளிவு, ஞானம்

உடல், மனம், குடும்பம்,
உறவுகள், நட்புகள், உதவிகள் 
செல்வங்கள், வசதிகள், 
வாய்ப்புகள் அனைத்துக்கும் 
நன்றி, நன்றி, நன்றி

உன் அருட்கொடையில் 
அறியாமையினால் 
மறந்த வற்றுக்கும் 
நன்றி, நன்றி, நன்றி

உன் நுண் கருணை 
வெள்ளத்தால் 
நீ அருளப்போகும் 
அனைத்துக்கும்
நன்றி, நன்றி, நன்றி

எங்களை வழிநடத்தும் 
மனிதர்களுக்கும்
உயிர்களுக்கும்
இயற்கைக்கும்
பிரபஞ்சத்துக்கும் 
குருமார்களுக்கும்
நபிமார்களுக்கும்
இறைநேசர்களுக்கும்
ஞானிகளுக்கும்
யோகிகளுக்கும்
முன்னோர்களுக்கும் 
புனித ஆன்மாக்களுக்கும்
நன்றி, நன்றி, நன்றி To Top