இயற்கை சிகிச்சை வழிமுறைகள்
உடல் நலம் பாதிக்கப்பட்டவரை குணபடுத்த ஹீலர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்
1. உங்களால் பாதிக்கப்பட்டவரின் தொந்தரவை குணபடுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்க வேண்டும்.
2. கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், பல வருடங்களாக ஆங்கில மருத்துவ மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும், அனுபவம் உண்டாகும் வரையில் மருத்துவம் செய்ய வேண்டாம்.
3. பாதிக்கப்பட்டவர் நீங்கள் கூறும் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே அவருக்கு வைத்தியம் செய்ய வேண்டும்.
4. அந்த பாதிக்கப்பட்டவருக்கு நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை முதலில் உருவாக்க வேண்டும்.
5. அவரின் தொந்தரவு மற்றும் உடலில் இயக்கத்தை பற்றிய புரிதலை உருவாக்க வேண்டும்.
6. அவரின் தொந்தரவு மேலும் மோசமாகாமல் இருப்பதற்கான வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
7. நோயினால் உண்டாகும் தொந்தரவையும், நோய் குணமாகும் போது உண்டாகும் தொந்தரவையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு சொல்ல வேண்டும்.
8. பாதிக்கப்பட்டவரின் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற தேவையான வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
9. புதிய கழிவுகள் அவரின் உடலில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. உடலில் நோயோ தொந்தரவோ உருவாக காரணமாக இருந்தவற்றை கண்டறிந்து திருத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
11. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகளை கற்றுத்தர வேண்டும்.
12. இயற்கையின் ஆற்றலும் சக்தியும் அவருக்கு கிடக்க கூடிய வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
13. இவற்றுக்கு பிறகு உங்களுக்கு தெரிந்த சிகிச்சை முறைகளை கொண்டு அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.
14. உங்களின் சிகிச்சை முறைக்கும், ஆலோசனைக்கும் பாதிக்கப்பட்டவர் ஒத்துழைக்க வில்லை என்றால், அவருக்கு மருத்துவம் செய்வதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.