இயற்கை மருத்துவம்


 இயற்கை மருத்துவம் என்பது உடலையும், மனதையும் உருவாக்கிய இயற்கையுடன் ஒத்திசைந்து, இயற்கையின் ஒத்துழைப்புடன் உடலிலும் மனதிலும் உண்டாகும் நோய்களையும் தொந்தரவுகளையும் குணப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் இயற்கையின் சட்டங்களை மீறாமல், இயற்கையின் அமைப்புக்கும் சட்டத்துக்கும் எதிராக செயல்படாமல், இயற்கையின் ஆற்றலையும், இயற்கையாக கிடைக்கும் பொருட்களையும் கொண்டு உடலின் உபாதைகளை நீக்கி ஆரோக்கியமாக வாழ்வது. 

உடலில் எந்த வகையான தொந்தரவு உண்டானாலும், அதை முழுமையாக குணமாக்க, உடலை ஒரு முழு இயக்கமாக பார்க்க வேண்டும். உடலில் தற்போது என்ன தொந்தரவு உண்டாகியிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். அந்த ஒரு குறிப்பிட்ட தொந்தரவை தாண்டி உடலில் வேறு தொந்தரவுகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும். 

இதற்கு முன்பாக என்னென்ன தொந்தரவுகள் உருவாகின என்பதை ஆராய வேண்டும். தற்போதைய தொந்தரவுகளுக்கும் பழைய தொந்தரவுகளுக்கும் ஏதாவது ஒற்றுமைகள் அல்லது தொடர்புகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு ஆராய்ந்து தொந்தரவின் மூலத்தை அறிந்து, முழுமையான தீர்வை தரக்கூடிய மருத்துவ முறையை கையாள வேண்டும்.


To Top