கொரோனா கிருமி இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை

 

இன்றைய நாள் வரையில் கொரோனா என்று ஒரு கிருமி இருப்பதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் சொல்கிறார்களே ஒழிய, இதுதான் அந்த கிருமி, அந்த கிருமி இப்படித்தான் இருக்கும், என்று யாரும் நிரூபிக்கவில்லை. அந்த கிருமி இருப்பதற்கான எந்த சான்றும் பொது மக்களின் முன் வைக்கப்படவில்லை.

கொரோனா கிருமி இப்படித்தான் உருவாகும், இப்படித்தான் அந்த கிருமி பரவுகிறது, இவ்வாறுதான் அந்த கிருமி தொற்று இருப்பதை உறுதி செய்கிறோம், இவ்வாறுதான் அந்த கிருமி தொற்றுக்கு மருத்துவம் செய்கிறோம் என்று, எந்த அரசாங்கமும், உலக சுகாதார அமைச்சும், மருத்துவ நிறுவனங்களும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும், பொது மக்களுக்கு விளக்கவில்லை.

இருப்பதாக நிரூபிக்கப்படாத, யார் கண்ணுக்கும் காட்டப்படாத, கொரோனா என்று ஒரு கிருமியின் பெயரை சொல்லி இந்த நாள் வரையில் பயத்தை விதைத்து, மருத்துவம் என்ற பெயரில் இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்கிறோம் என்று மக்களை சுரண்டுகிறார்கள், கொலை செய்கிறார்கள். 

இல்லாத கிருமியிடமிருந்து பொதுமக்களை காப்பதாக கூறிக்கொண்டு திடீர் மரணம் உட்பட பல பக்கவிளைவுகளை உருவாக்க கூடிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்கிறார்கள். அவற்றை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

உலகம் முழுமைக்கும் சர்க்கரை நோய் முதலாக புற்று நோய் வரையில், பல நோய்களால் ஆண்டுக்கு பல கோடி மக்கள் மரணமடைகிறார்கள். அந்த நோய்களை குணப்படுத்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இல்லை, அந்த கொடிய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் மரணம் வரையில் குணமாவதில்லை. ஆனால் அந்த கொடிய நோய்களை பற்றி உலக சுகாதார அமைச்சோ, நமது அரசாங்கங்களோ அக்கறை கொள்வதில்லை, அவற்றுக்கான விழிப்புணர்வை உண்டாக்குவதில்லை.

கோவிட் -19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வகை படுத்தப்பட்ட மக்களில் 95% க்கும் மேல் உலகம் முழுமைக்கும் குணமாகியுள்ளனர். குணமாக வாய்ப்பே இல்லாத நோய்களை பற்றி பேசாமல் 95% குணமாக வாய்ப்புடைய நோயைப்பற்றி எதற்காக மக்களிடையில் அச்சத்தை உண்டாக்குகிறார்கள் என்று சிந்திப்பவர்களுக்கு புரியும்.

இந்த கோவிட்-19 நாடகம் மற்றும் மிரட்டலுக்கு உள்நோக்கம், புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்வது. தற்போது நடைமுறையில் இருக்கும் 16 கட்டாய தடுப்பூசிகளுடன் புதிதாக ஒரு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும். 

ஒவ்வொரு கால கட்டத்திலும் எவ்வாறு புதிய தடுப்பூசிகளை அறிமுகம் செய்தார்கள் என்பது, தற்போதைய உலக நிலவரத்தை பார்த்தாலே நமக்கு தெளிவாக புரியும்.

தொடரும்..

அதிகமான மரணங்களை உண்டாக்கும் நோய்களின் விவரங்கள் 
https://ourworldindata.org/causes-of-death
https://www.weforum.org/agenda/2021/02/top-10-global-causes-death/
https://www.who.int/news-room/fact-sheets/detail/the-top-10-causes-of-death
https://en.wikipedia.org/wiki/List_of_causes_of_death_by_rate
https://www.cdc.gov/nchs/fastats/leading-causes-of-death.htm

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.