குரு என்பவர் யார்?

 
வாழ்க்கை என்றால் என்னவென்று உணராமலும், காணும் பொருளெல்லாம் உண்மையென நம்பிக்கொண்டும், அறியாமை எனும் இருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டும் விளக்குதான் குரு. 

வாழ்க்கையென்றால் என்ன? சத்தியமென்றால் என்ன? தர்மமென்றால் என்ன? எது அழியக்கூடியது? எது நிலையானது? எது மரணத்துக்கு பின்பும் உடன் வரக்கூடியது? என்பன போன்ற ஞான வெளிச்சங்களை நோக்கி அழைத்துச் செல்பவர் தான் குரு.

அதற்காக குரு என்பவர் உங்களை முதுகில் உப்புமூட்டை தூக்கி கொண்டு செல்வார் என்று எண்ணக்கூடாது. அவர் பாதையை மட்டுமே காட்டுவார் பயணம் உங்களுடையதாக தான் இருக்க வேண்டும்.

முன்பு சென்று வந்த பயணி புதிய பயணிக்கு வழிகாட்டுவதை போன்று ஒரு குரு தனது மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். ஆனால் வழி முழுவதும் உடன் வரமாட்டார், பாதையும் பயணமும் சேருமிடமும் உங்களுடையதாக தான் இருக்கும்.


To Top