கோவிட்-19 பீதியும் நாடகமும்

 


2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி வைக்கபட்ட கோவிட்-19 பீதி, 2020ஐ தொடர்ந்து இந்த ஆண்டு மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரக்கூடும் என்று நான் கணிக்கிறேன். 2022 இறுதி அல்லது 2023 தொடக்கம் வரையில் இந்த நாடகம் தொடரக்கூடும். 

காய்ச்சலும், சளியும், மூச்சு திணறலும் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கு வந்து போகும் தொந்தரவுகள்தான், ஆனால் அவற்றுக்கு புதிதாக கோவிட்-19 என்ற பெயர் சூட்டி மக்களை மிரட்டவும், மக்களுக்கிடையில் பீதியை உண்டாக்கவும், நிச்சயமாக ஒரு நோக்கம் இருக்குமல்லவா?

டிசம்பர் மாதம், பெரும்பாலான நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகும். குளிர் காலங்களில் பலருக்கு சளியும் காய்ச்சலும் மூச்சு திணறலும் உண்டாகும். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கோவிட்-19 என்ற ஒரு புதிய வியாபாரத்தை டிசம்பர் 2019 ஆம் ஆண்டு மருந்து கம்பெனிகள் தொடங்கி வைத்தன.

இன்று வரையில், உலகம் முழுமைக்கும் எந்த எந்த நாடுகளில் குளிர் காலம் நடக்கிறதோ, அந்த நாடுகளில் கோவிட் தோற்று அதிகரிக்கிறது பரவுகிறது என்று தொலைக்காட்சிகள் அலறுவதை நீங்கள் காணலாம். உண்மையான நிலவரம் என்னவென்றால் குளிர்காலமாக இருப்பதனால் பலருக்கு சளி, காய்ச்சல் உண்டாகிறது, சிலருக்கு மூச்சு திணறல் உண்டாகிறது, அவற்றுக்கு கோவிட்-19 என்று பெயர் சூட்டி மருந்து கம்பெனிகள் மக்களை சுரண்டுகின்றன.

அச்சத்தினாலும், காய்ச்சல், சளி, மூச்சு திணறல் போன்ற காரணங்களாலும், இரசாயன மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளாலும் பல்லாயிர கணக்கான மக்கள் மரணம் அடைந்துள்ளனர். இவற்றோடு சேர்த்து முதுமையின் மரணங்கள் மற்றும் இயற்கையாக உண்டாகும் மரணங்களை கூட கோவிட்-19 பெயரில் வரவு வைத்து மக்களுக்கு அச்சமூட்டுகிறார்கள், மக்களை மிரட்டுகிறார்கள். 

இந்த நாடகம் மற்றும் மிரட்டலுக்கு உள்நோக்கம்? தடுப்பூசி வியாபாரம் செய்ய வேண்டும். அந்த தடுப்பூசியை ஆண்டு தோறும் போடும் வகையில் ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலக மக்கள் தொகையில் பாதி அளவு மனிதர்களுக்காவது தடுப்பூசி போடாமல் இந்த நாடகத்தை நிறுத்த மாட்டார்கள்.

தொடரும்…

To Top