எதற்காக மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்?


ஒரு மரம் சிறிய செடியாக இருக்கும் போது எளிதாக காற்றுக்கும் மழைக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் பலியாகி விடும். அதே செடி காற்று மழை வெயில் என்று பல்வேறு காலநிலை மாற்றங்களுக்கும் பழக்கப்படும் போது, அதன் வேரை ஆழமாக பதித்து மண்ணை இருக்க பற்றிக் கொள்கிறது. அதன் பின்பாக உண்டாகும் எந்த ஒரு இயற்கை மாற்றத்திற்கும் எதிர்த்து போராடும் வலிமை மரத்துக்கு உருவாகிவிடுகிறது. 

அந்த உதாரணத்தைப் போன்றே ஆன்மாக்களை மேம்படுத்தும் பயிற்சி காலமாக இந்த உலக வாழ்க்கை இருக்கிறது. ஒரு ஆன்மா தனது சுய தன்மையிலிருந்து மேம்பட்டு ஒரு உயர்ந்த நிலை ஆன்மாவாக மாறுவதற்கு இந்த உலகில் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஒரு அறிவு முதலான பிறவிகளை எடுத்து பிறகு இறுதியாக மனித பிறப்பெடுக்கும் ஆன்மாவுக்கு, வாழ்க்கை, இன்பம், துன்பம், அன்பு, பாசம், கருணை, போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 


To Top