உடலில் வலிகள் எதனால் உருவாகின்றன?

வலிகள் என்பவை உடல் நமக்களிக்கும் எச்சரிக்கைகளாகும். பல்வேறு காரணங்களுக்காக உடலில் வலிகள் உண்டாகின்றன அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். முதலாவதாக வலி உண்டான உறுப்பில் ஆற்றல் போதவில்லை என்று பொருளாகும், குறைந்த ஆற்றல்களை கொண்டு சிரமப்பட்டு உடல் இயங்குவதால், அதை உணர்த்துவதற்காக வலி உண்டாகிறது. அடுத்ததாக வலி உண்டான பகுதியைச் சார்ந்த பஞ்சபூத ஆற்றல்கள் குறைவாகவோ சீர்கெட்டோ இருக்கின்றன என்று பொருளாகும். அடுத்ததாக வலி உண்டான பகுதியில் உடல் பராமரிப்பு வேலைகள் அல்லது நோய் குணப்படுத்தும் வேலைகள், நடைபெறுகின்றன என்று பொருளாகும். பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதை உணர்த்துவதற்காக வலி உண்டாகிறது. எவ்வாறு இருந்தாலும் வலி என்பது உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்துவதற்கான அறிகுறியாகும். உடலில் எந்த வகையான வலி உண்டானாலும், உணவை நிறுத்தி, உடல் உழைப்பை நிறுத்தி உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அதை விடுத்து வலியை கட்டுப்படுத்த முயல்வதும், மருந்து மாத்திரைகளை உட்கொள்வதும் தவறாகும்.


To Top