கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதினால் என்ன பயன்

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் அவசியம் என்றோ, கிரிப்டோ கரன்சிகள் உலகத்தையே மாற்ற போகின்றன என்றோ நான் கூற வரவில்லை. கிரிப்டோ கரன்சிகள் விரைவாக விலை அதிகரிக்கவும் குறையவும் கூடிய தன்மையில் இருப்பதனால், சரியாக நிர்வாகம் செய்ய கூடியவர்களுக்கு அவை நல்ல இலாபத்தை தரக்கூடும் என்பது மட்டுமே எனது கருத்தாகும்.

பிட்கோயினுக்கு அடுத்ததாக அறிமுகமானது இதெரியம் (Ethereum). தற்போது வெளியிடப்படும் பெரும்பாலான கிரிப்டோ கரன்சிகள் இதெரியத்தை அடிப்படையாக கொண்டு தான் வெளியிடப்படுகின்றன. அவற்றை இதெரியத்தின் குட்டிகள் என்றும் கூறலாம்.

தற்போது வெளியிடப்படும் பல கிரிப்டோ கரன்சிகள் இதெரியத்தை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படுவதால் அவற்றை தைரியமாக வாங்கலாம். ஆனாலும் அவற்றின் விலை அதிகரிக்காமல் போகவும், அல்லது தற்போதைய சந்தை விலையை விட இன்னும் குறையவும் சாத்திய கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது. அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தரமான கிரிப்டோ கரன்சிகள் சில மாதங்களில் பல முறை விலையேற்றம் காண்கின்றன. சரியான கிரிப்டோ காயினை இனம்கண்டு, சரியான தரமான எக்ஸ்சேஞ்ச் மூலமாக, கிரிப்டோ கரன்சிகளை வாங்கினால் ஒரு சில வாரங்களில் இலாபத்தை பார்க்கலாம். சரியான நாணயத்தை வாங்கினீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்குள்ளாகவே உங்களின் முதலீடு இருமடங்காகிவிடும்.

சரியான நாணயம், சரியான எக்ஸ்சேஞ்ச் என்று நான் கூறுவது, தரமான அடிப்படையும், தரமான முதலீடும், தரமான கட்டமைப்பும், தரமான நிர்வாக குழுவும் கொண்டவைகளை தான். தரமான மற்றும் சரியான நாணயங்களுக்கு மட்டுமே விலை அதிகரிக்கும் சாத்திய கூறுகள் உள்ளன. அவற்றை மட்டுமே விலை அதிகரித்த பிறகு விற்று உண்மையான பணமாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.

Crypto.com, Coinbase, Binance, என்று பல கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்களில் டிரேடிங் செய்துவிட்டேன். தற்போது பைனன்ஸ் எக்ஸ்சேஞ்சில் அமெரிக்கா டாலரிலும், லூனோ எக்ஸ்சேஞ்சில்  மலேசியா வெள்ளியிலும், வஜிர்எக்ஸ் எக்ஸ்சேஞ்சில்  இந்திய ரூபாயில் டிரேடிங் செய்துக் கொண்டிருக்கிறேன். எதிலும் நான் நஷ்டம் அடையவில்லை.

தொடக்க காலத்தில் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? எக்ஸ்சேஞ்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அவற்றின் சேவை கட்டணங்கள் என்ன? என்பனவற்றை அறிந்துகொள்ளாமல் பண விரயம் செய்திருக்கிறேன் என்றாலும் இறுதியில் கணக்கு பார்த்தால் ஆறு மாதங்களில் எனது முதலீடுகள் இரட்டிப்பாகிவிட்டன.

டிரேடிங் செய்வதற்கான ஆர்வமும், பொறுமையும், நிதானமும்; கிரிப்டோ பற்றி அறிந்துகொள்ள வாசிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு நிச்சயமாக கிரிப்டோ டிரேடிங் வெற்றியை தரும். மேலே உள்ள குணமுடையவர்கள் முயற்சி செய்துபார்க்கலாம்.


 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.