Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

மலேசியாவில் கிரிப்டோ கரன்சிகள் வாங்க மற்றும் விற்பனை செய்ய

 
பல நூறு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் இருந்தாலும் அவற்றுக்கு மலேசியாவில் அனுமதியில்லை. மலேசிய நாணயத்தின் மதிப்பிலோ, மலேசிய வங்கி கணக்கை கொண்டோ, மலேசிய வங்கிகள் வெளியிடும் வங்கி அட்டைகளை கொண்டோ, பெரும்பாலான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ நாணயங்கள் வாங்கவும் விற்கவும் முடியாது.
 
மலேசிய அரசாங்கம் மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் கிரிப்டோ நாணயங்களை வாங்கவும், விற்கவும், பரிமாற்றம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் முதன்மையான நிறுவனம் லூனோ Luno

லூனோ நிறுவனம் மூலமாக மிக குறைவான மதிப்பில் அதாவது மலேசிய ரிங்கிட் 10 முதலாக கிரிப்டோ நாணயங்களை வாங்கலாம். கிரிப்டோ வாங்க குறைந்த பட்சம் 10 வெள்ளியும் அதிகபட்சம் ஒரு முறை முதலீடாக 29,999 வெள்ளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த லூனோ நிறுவனத்தின் சிறப்பு என்ன என்றால், அத்தனை கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிலும் அமெரிக்கா டாலர் அல்லது யூரோ அடிப்படை நாணயமாக பயன்படுத்தப்படும் போது, மலேசியாவிலிருந்து கிரிப்டோ நாணயங்களை வாங்குவோருக்கு லூனோவில் மலேசிய ரிங்கிட் அடிப்படை நாணயமாக பயன்படுத்தப்படுகிறது.

மலேசியர்கள் நேரடியாக தங்களின் மலேசிய வங்கி கணக்கிலிருந்து லூனோவில் கிரிப்டோ நாணயங்களை வாங்கலாம் விற்பனை செய்யலாம். Binance, Coinbase போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ கரன்சிகளை வைத்திருப்போர் அவற்றை லூனோ எக்ஸ்சேஞ்சுக்கு மாற்றி, அவற்றை மலேசிய வெள்ளிக்கு விற்பனை செய்யலாம். விற்பனைக்கான பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

புதிதாக கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கும் சேமிப்புக்காக அல்லது முதலீடாக கிரிப்டோ கரன்சி வாங்குபவர்களுக்கும் லூனோ ஒரு சிறந்த தலமாக இருக்கும். நாணய மாற்று கட்டணமில்லாமல் அதாவது மற்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ நாணயங்கள் வாங்கும்போது அமெரிக்கா நாணயமாக செலுத்த வேண்டும். மலேசிய வெள்ளியை அமெரிக்கா நாணயமாக மாற்றும் போது நூறு டாலருக்கு இரண்டு டாலர் முதல் பத்து டாலர் வரையில் நஷ்டமாகும்.

தற்போது மலேசியாவில் உள்ளவர்கள் Bitcoin, Ethereum, Litecoin மற்றும் XRP நாணயங்களை மட்டுமே லூனோ மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும். இதை ஒரு பாதுகாப்பு அம்சமாக மட்டுமே நான் பார்க்கிறேன். அதாவது நிலையான சந்தை மதிப்புடைய பாதுகாப்பான நாணயங்களை மட்டுமே மலேசியர்கள் லூனோ மூலமாக வாங்க முடியும். இந்த நடைமுறை மலேசியர்களின் பணத்தை பாதுகாக்க மற்றும் நஷ்டத்தை குறைக்க, ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம்.

 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"