இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை வாங்குவது எப்படி?

 

இந்திய அரசாங்கம் இந்தியாவில் கிரிப்டோ நாணயங்களின் விற்பனைக்கும், பரிவர்த்தனைக்கும், பயன்பாட்டுக்கும் தடை விதித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட முழுமையாக அனுமதி இல்லை. தற்போது முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தடையை நீக்கியுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு எக்ஸ்சேஞ்ச்களில் மூலமாக தற்போது இந்தியாவில் கிரிப்டோ நாணயங்களை வாங்கலாம், விற்பனை செய்யலாம் மற்றும் டிரேடிங் செய்யலாம்.

அந்த இரண்டு எக்ஸ்சேஞ்ச்களில் விவரங்களையும் இணையத்தில் ஆராய்ந்து பார்க்கும் போது அவற்றில் ஒரு எக்ஸ்சேஞ்சில் சில குளறுபடிகள் இருப்பதாக சில பதிவுகளை கண்டேன். அந்த எக்ஸ்சேஞ்சில் மாதாமாதம் உறுப்பினர் கட்டணமும் விதிக்கப்படுகிறது. இந்த இரு காரணங்களால் அந்த எக்ஸ்சேஞ்சை தவிர்த்து WazirX எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து இந்திய ரூபாயில் டிரேடிங் செய்ய தொடங்கிவிட்டேன்.

நான் WazirX எக்ஸ்சேஞ்சை தேர்ந்தெடுக்க சில முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக முதலீட்டின் பாதுகாப்பு. WazirX நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான Binance மூலமாக இயக்கப்படுகிறது. பைனான்சின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதனால் பணத்துக்கும் உண்மை தன்மைக்கும் முழு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக இந்திய வங்கிகளில் இருந்து நேரடியாக இந்திய ரூபாயில் முதலீடு செய்யலாம். டிரேடிங் மூலமாக சம்பாதித்த தொகையையும், வாலெட்டில் மீதமிருக்கும் தொகையையும் நேரடியாக நமது இந்திய வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம்.


வஜிர்எக்ஸ் இணையதளம் பார்ப்பதற்கும் டிரேடிங் செய்வதற்கும் எளிதாக இருக்கிறது. கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் எளிதாக இருக்கிறது. இங்கு இந்திய ரூபாய் (INR), USDT, WRX மற்றும் Bitcoin மூலமாக டிரேடிங் செய்யலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் குறிப்பிட்ட காலத்துக்கு WazirX எக்ஸ்சேஞ்சில் இருக்கும் நாணயங்களை எந்த சேவை கட்டணமும் இல்லாமல் Binance exchange கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். கிரிப்டோ கரன்சி வாங்கவும் டிரேடிங் செய்யவும் ஆர்வமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து WazirX எக்ஸ்சேஞ்சில் பதிந்து கொள்ளலாம்.


 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.