Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

New Normal - நியூ நோர்மல் என்பது என்ன?

 
இந்த ஆண்டின் தொடக்கம் முதலாக New Normal நியூ நோர்மல் என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். மலேசியாவில் நான் முதன் முதலில் பார்த்தது ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் தான். “இனி நாம் நியூ நோர்மலுக்கு மாற வேண்டும், புதிய கட்டுப்பாட்டு வாழ்க்கைக்கு பழகிக்கொள்ள வேண்டும்” என்று அங்கே ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் நான் முதன் முதலில் கேள்விப்பட்டது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேசும்போதுதான். அவர் ஒரு காணொளியில் “இனி நாம் அனைவரும் (நியூ நோர்மல்) புதிய கட்டுப்பாட்டு வாழ்க்கைக்கு பழகி கொள்ள வேண்டும்” என்று பேசினார். அந்த காலகட்டத்தில் பல பன்னாட்டு செய்தி நிறுவனங்களும், தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும், இணையதளங்களும் நியூ நோர்மல் பற்றி பேசிக்கொண்டிருந்தன.

நியூ நோர்மல் என்ற புதிய வாழ்க்கை முறைகள் மக்களை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை என்று அத்தனை செய்தி நிறுவனங்களும் அரசாங்கங்களும் பிரச்சாரம் செய்கின்றன. அதாவது கோவிட் 19 தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றவே இந்த நியூ நோர்மல் வாழ்க்கைமுறை நடைமுறைபடுத்தப்படுகிறது என்று அரசாங்கங்கள் கூறிவருகின்றன.

முக கவரி (mask) அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, மனிதர்களுக்கிடையில் இடைவெளியை கடைபிடிப்பது, மற்றும் வீட்டில் அடங்கி கிடப்பது தான் நியூ நோர்மல் என்று தொடங்கி. படிப்படியாக பல புதிய சட்டங்களை உருவாக்கி மக்களை அடக்க தொடங்கின.

நியூ நோர்மல் என்பது என்ன?
நியூ நோர்மல் என்றால் என்னவென்று கேட்டால் ஈக்களை மக்களின் மீது திணிப்பது தான் நியூ நோர்மல். மனித வாழ்க்கையில் அத்தனை விசயங்களையும் ஈ-மயமாக்குவது, அதாவது அத்தனை விசயங்களையும் மின்னியல் ஆக்குவது. அதன் முதல் தொடக்கம் தான் இந்தியாவில் அத்தனை விஷயங்களிலும் மின்னியல் பயன்பாட்டை அறிமுகம் செய்தது. அனைவருக்கும் வங்கி கணக்கு கட்டாயம் என்று அறிமுகம் செய்தது. அரசாங்க பரிவர்த்தனைகள் அத்தனையும் இணையதளம் மூலமாக தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நிர்ப்பந்திக்க பட்டது. மேலும் பல விஷயங்களை கூறலாம்.

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நல்ல திட்டம் போன்றுதான் தோன்றும் ஆனால் இதன் உள் நோக்கம் மக்களை அடிமைபடுத்துவது. மக்களை அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதன் தொடர்ச்சியாக அந்த அரசாங்கம் யாருக்கு அடிமையாக இருக்கிறதோ, அந்த நாட்டின் மக்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் மறைமுக அடிமைகள் ஆவார்கள்.

வங்கிகளின் மூலமாக மக்களை கட்டுப்படுத்துவது
உங்களிடம் ஒரு லட்சம் பணம் இருந்தால் அது உங்கள் சொத்து, நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதே பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்தால் அரசாங்கமோ வங்கியோ அந்த தொகையை உங்களுக்கு தர மறுத்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆயிரம் ஐநூறு ரூபாய்களை தடை செய்த போது மக்கள் நடு தெருக்களில் வெயிலில் தனது சொந்த பணத்தை வங்கியிலிருந்து பெறுவதற்காக வரிசையில் நின்றது இதற்கு ஒரு உதாரணம்.

மின்னியல் பரிவர்த்தனைகள் மூலமாக கட்டுப்படுத்துவது
ஒரு அரசாங்க அதிகாரி உங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யவில்லை என்றாலும், ஒரு அரசாங்க அலுவலகத்தில் உங்களுக்கு சரியான சேவை வழங்க படவில்லை என்றாலும், அந்த அதிகாரியிடம் உங்களால் கேள்வி கேட்க முடியும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை, உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ள முடியும். மின்னியல் அரசாங்கத்தில் இது நடக்காது, எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் நீங்கள் மின்னஞ்சலுக்காக காத்திருக்க வேண்டும். எவ்வளவு மன வேதனை அல்லது தலை போகின்ற காரியமாக இருந்தாலும் உங்களால் மின்னஞ்சல் மட்டுமே அனுப்ப முடியும். 

கம்ப்யூட்டர், இன்டர்நெட், நெட்வொர்க்கிங், போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாகன உரிமம் போன்றவற்றில் உள்ள உங்களின் விவரங்களை கொண்டு உங்களுக்கு எதை வேண்டுமானாலும் கிடைக்க விடாமல் செய்ய அரசாங்கத்தால் முடியும். நல்ல தலைவர்களும் நல்ல அரசாங்கமும் அமைந்தால் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது. அதே சுயநலவாதிகள் தலைவர்களாக இருந்து அவர்களின் தலைமையில் அரசாங்கம் அமைந்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அரசாங்கத்தை எதிர்க்கும் அல்லது எதிர் கேள்விகள் கேட்கும் யாருக்கு வேண்டுமானாலும் அத்தனை அரசாங்க சேவைகளையும் தடை செய்ய அரசாங்கத்தால் முடியும். அவர்களின் வங்கி கணக்கு, சொத்து, பாஸ்போர்ட், அடையாள அட்டை என்று எதை வேண்டுமானாலும் அரசாங்கமோ அல்லது மற்ற நிறுவனங்களோ தடை செய்ய முடியும். உதாரணத்துக்கு சொல்வதானால் ஒரு கோடீஸ்வரனை அவனின் சொத்துக்களையும் வாங்கி பரிவர்த்தனைகளையும் முடக்குவாதம் மூலமாக ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாமல் செய்துவிட முடியும்.

உங்கள் கையில் பணம் இருக்கும் வரையில் அல்லது தங்கம் இருக்கும் வரையில் நீங்கள் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். அதே வங்கியில் இருந்தால் அது உங்கள் சொத்து அல்ல. இடையில் இந்திய அரசாங்கம் தனி நபர் வைத்திருக்கும் தங்கத்தின் அளவுக்கு வரையறை கொண்டு வந்தது குறிப்பிடதக்கது.

முடிந்த வரையில் உங்களின் கையிருப்பை பணமாக இல்லாமல் தங்கமாகவோ, வெள்ளியாகவோ வைத்திருங்கள். அவற்றின் பாதுகாப்பும் மிகவும் அவசியம்.

தொடரும்...


No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"