Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

உங்கள் குடலில் பழைய மலங்கள் தேங்கி இருப்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?


பெரும்பாலான நபர்களுக்கு உடலின் மல கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் குடலின் உள்ளேயே தேங்கி இருக்கும். ஆனால் பலர் அதனை உணராமல் இருப்பார்கள். மலச்சிக்கல் கடுமையான பிறகு, பல நாட்களுக்கு மலம் வெளியேறாமல் அடைத்து கொண்ட பிறகுதான் அதனை உணர்வார்கள்.

உடலில் தேங்கும் மலங்கள் தான் அத்தனை நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. என்னதான் ஆரோக்கியமான உணவு முறை, சுகாதாரமான வாழ்க்கை முறை, முறையான உடற்பயிற்சி, இயற்கையை சார்ந்த வாழ்க்கை என்று ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், மலம் மட்டும் குடலில் தேங்க தொடங்கினால் அத்தனை வகையான நோய்களும் சுயமாக உருவாகிவிடும்.

குடலில் மலம் தேங்கியிருப்பதை கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை கொண்டு அறிந்துகொள்ளலாம். மலம் முழுமையாக வெளியேறாமல் இருந்தால்...

1. காலையில் மலம் கழிக்க சிரமமாக இருக்கும்.
2. சிறிது வேலை செய்தாலும் உடலில் சோர்வும் அசதியும் உண்டாகும்.
3. சிறிது நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தால் உறக்கம் வரும்.
4. உடல் எப்போதும் சோர்வாக இருக்கும்.
5. பசியின்மை உருவாகும்.
6. வயிறு உப்புசமாக இருக்கும்.
7. வயிறு பாரமாக கல்லை போட்டது போன்று இருக்கும்.
8. பல் ஈறுகளில் வலி உண்டாகும். 
9. தொப்பை உருவாகும்.
10. அடிவயிற்றில் வலி உருவாகும்.
11. தோலில் அறிப்புகளும், புண்களும் உருவாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளை கொண்டு உங்கள் உடலில் மலம் தேங்கியுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு வேலை உடலில் மலம் தேங்கி இருக்குமானால் அதனை உடனே சுத்தம் செய்ய தேவையான முயற்சிகளை செய்யுங்கள். மலச்சிக்கல் தொடர்பான மற்ற கட்டுரைகளையும் வாசித்துபாருங்கள்.

No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"