இலவசமாக கிரிப்டோ மைனிங் செய்யும் இணையதளம்

கிரிப்டோ கரன்சி வாங்க வேண்டும், கிரிப்டோ கரன்சி வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இருந்தாலும் ஏமாந்துவிடுவோமோ என்று பயமும் இருக்கத்தான் செய்யும். 

Stormgain என்ற இணையதளம் மூலமாக இலவசமாக bitcoin (Santoshi) mining செய்யலாம். மைனிங் செய்த பிட்கோயினை USDT அமெரிக்கா டாலராக stormgain வாலெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். 

இந்த மைனிங் மூலமாக இலாபம் கிடைக்கும் பணக்காரன் ஆகி விடலாம் என்று நான் கூற வரவில்லை. இந்த உலகில் எதுவுமே இலவசமாக கிடைக்காது. கிரிப்டோ கரன்சி மைனிங் மற்றும் டிரேடிங் என்றால் என்னவென்று அறிமுகம் கிடைக்கும் அவ்வளவுதான்.

இலவசமாக கிரிப்டோ கரன்சி கிடைத்தால் அதை வைத்து டிரேடிங் செய்து பழகலாம். நன்றாக பழகிய பிறகு தேவைப்பட்டால் உண்மையான பணத்தை கொண்டு கிரிப்டோ கரன்சிகள் வாங்கலாம் அல்லவா. கிரிப்டோ கரன்சி டிரேடிங் மிகவும் ஆபத்தானது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அனுபவம் இல்லாதவர்கள் கிரிப்டோ கரன்சி டிரேடிங் முயற்சி செய்ய வேண்டாம்.

இலவசமாக பிட்கோயின் மைனிங் செய்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
1. ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் மைனிங் நின்றுவிடும், மைனிங்கை ரிஸ்டார்ட் செய்ய வேண்டும்.

2. குறைந்தது பத்து அமெரிக்கா டாலர் வந்த பிறகுதான் மைனிங் செய்த தொகை வாலெட்டுக்கு மாறும்.

3. மைனிங் செய்த பிட்கோயினை பணமாக மாற்றிக்கொள்ள முடியாது.

4. மைனிங் செய்த பிட்கோயினை டிரேடிங் செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும்.

5. டிரேடிங் செய்து கிடைக்கும் இலாபத்தை வாலெட்டிலிருந்து மாற்றிக்கொள்ளலாம்.  
எச்சரிக்கை
கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.