Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

எச்சரிக்கை: போலியான கிரிப்டோ நாணயங்கள்


ஒரு நல்ல பொருள் இருந்தால், அதற்கு மாற்றாக அதே உருவத்தில் சில தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் அறிமுகமாகும். அதைப்போன்றே சில போலியான பொருட்களும் அறிமுகமாகும். இவை அன்றாட வாழ்க்கையில் நாம் காணக்கூடிய நிகழ்வுகளாகும். சாதாரண சோப்புக்கு கூட அதே உருவில் போலியான சோப்புகள் அறிமுகம் செய்வார்கள். இதே நிலை கிரிப்டோ கரன்சி சந்தையிலும் நடைமுறையில் உள்ளது.

பெரிய முதலீடு செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்புடன், முறையாக கட்டமைக்கப்பட்ட, சரியான நிர்வாக குழுக்களுடன் பல கிரிப்டோ நாணயங்கள் அறிமுகமாகியுள்ளன. இதே காலகட்டத்தில் முதலீடு இல்லாத, பாதுகாப்பு இல்லாத, சரியான நிர்வாக குழு இல்லாத, வாங்க மட்டுமே முடியும் ஆனால் பயன்படுத்தவோ, பரிமாற்றம் செய்யவோ முடியாதவாறு பல நூறு கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன.

ஒரு இணையதளம் இருக்கும், கவர்ச்சியான விளம்பரம் இருக்கும், எதிர்காலத்தில் பெரிய அளவில் அந்த கிரிப்டோவின் மதிப்பு உயரும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரம் இருக்கும். மற்றபடி சந்தை மதிப்போ, வெளியிடப்பட்ட கிரிப்டோ கரன்சிக்கு ஏற்ப பண கையிருப்போ, தங்கம் கையிருப்போ, நிலையான லாபம் தரக்கூடிய தொழிலோ இருக்காது.

இவ்வாறான இணையதளங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு பலர் ஏமாந்து போய் தங்களின் சேமிப்பை இழந்து விடுகிறார்கள். அல்லது மதிப்பில்லாத கிரிப்டோ நாணயங்களை கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு பத்து முறை நன்றாக சிந்தித்து, ஆராய்ந்து பின் தேவைப்பட்டால் நேரடியாக சரியான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"