கிரிப்டோ நாணயங்களின் விலைகள் எவ்வாறு மாறுகின்றன

 

நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களை விடவும் கிரிப்டோ கரன்சிகளின் விலை தினசரி மாறிக்கொண்டே இருக்கும். அதாவது மலேசிய ரிங்கிட், சிங்கப்பூர் டாலர், இந்திய ரூபாய், ஜப்பான் யென், போன்ற நாடுகள் வெளியிடும் நாணயங்களை விடவும் கிரிப்டோ கரன்சிகளின் விலை தினசரி மாறிக்கொண்டே இருக்கும். சில நாட்களிலேயே பல மடங்காக உயர்ந்துவிடும் அல்லது திடீரென்று சில மணி துளிகளில் விலை பாதியாக குறைந்துவிடும்.

கிரிப்டோ நாணயங்கள் நிலையான விலை இல்லாதவை. எந்த நேரத்திலும் ஏறலாம், இறங்கலாம். தற்போது நாம் பயன்படுத்தும் பணமானது அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது. எல்லா நாட்டு பணத்திலும் அந்த நாட்டு கவர்னர் “இந்த பணத்திற்கு உரிய மதிப்புக்கு நான் உத்தரவாதம்” என்று கையொப்பம் இட்டு இருப்பார். நம்மிடம் இருக்கும் பணத்துக்கு அதை வெளியிட்ட அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. 

ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை, பங்கு சந்தை, வேலையில்லா திண்டாட்டம், நிதி அறிக்கை, வங்கி வட்டி, அரசியல் மாற்றங்கள், என்று பலவகையான விஷயங்களை கணக்கில் கொண்டு அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கும் அல்லது குறையும்.

ஆனால் கிரிப்டோ கரன்சிகள் தனிநபர்களாலும் தனியார் நிறுவனங்களாலும் வெளியிடப்படுகின்றன. கிரிப்டோ கரன்சியை வெளியிட்ட அளவு, அதன் பாதுகாப்பு, நாணயத்தின் நிதி இருப்பு, அந்த நாணயத்தை மக்கள் வாங்கும் அளவு, விற்கும் அளவு, அதன் பரந்த பயன்பாட்டு முறை மற்றும் அதன் மதிப்புக்கு ஏற்ப அதன் விலை ஏற்றவும் இறங்கவும் செய்கிறது.

கிரிப்டோ கரன்சிகளின் சிறப்பே இந்த ஏற்ற இறக்கம் தான், இந்த ஏற்ற இறக்கங்களை சரியாக கணிக்கக் கூடியவர்கள், விரைவில் தனது கிரிப்டோ கரன்சி கையிருப்பை பல மடங்காக உயர்த்தலாம்.

அதாவது விலை உயர்ந்த நாணயம் வைத்திருப்பவர், விலை குறைந்த நாணயத்துக்கு மாற்றிக்கொள்ளும் போது அவருக்கு குறைந்த விலையில் அதிக நாணயங்கள் கிடைக்கும். அவர் வாங்கிய விலை குறைந்த நாணயத்தின் விலை மீண்டும் உயரும் போது அவருக்கு இலாபம் கிடைக்கும்.

உதாரணத்துக்கு: ஒருவர் $100 மதிப்புடைய நாணயங்கள் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். $1 மதிப்புடைய மற்ற நாணயத்தின் விலை குறையும் போது அவர் வைத்திருக்கும் நாணயங்களை விலை குறையும் நாணயமாக மாற்றிக் கொள்ளலாம்

$1 மதிப்புடைய அந்த நாணயத்தின் மதிப்பு உயர்ந்து $1.50 உயரும் போது அவருக்கு 50% இலாபம் கிடைக்கும். இந்த சூழற்சியை மீண்டும் மீண்டும் செய்யும் போது அதிக இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்த $1 நாணயத்தின் மதிப்பு மறுநாள் 80 காசாகவும் குறையலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிரிப்டோ கரன்சி என்பது எந்த காலத்தில் விலை நிலையில்லாதது.


 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.