Cryptocurrency கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

ஒரு காலத்தில் வியாபாரங்கள் பண்டமாற்று முறையில் நடைபெற்றன. ஒரு மனிதர் தன்னிடம் இருக்கும் பொருளை அடுத்த மனிதரிடம் கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக அவருக்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்வார். 

கால ஓட்டத்தில் சந்தைகள் உருவாக தொடங்கின. சந்தைகளில் அதிகமான வாய்ப்புகள் உட்பத்தியாளர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் இருந்தன. உற்பத்தியாளர் தனது பொருளை சந்தைக்கு கொண்டு சென்று தனக்கு தேவையான பொருளையும், பொருளின் அளவையும், பொருளின் தரத்தையும் தானே நிர்ணயித்து; அதற்கு ஏற்ற நபரிடம் மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தது. இதன் மூலம் தனது உற்பத்தி பொருளுக்கு தானே மதிப்பை நிர்ணயம் செய்தார். இதுதான் தற்போதைய கிரிப்டோ கரன்சி முறை.

கால ஓட்டத்தில் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் கட்டணமாக தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்பட்டன. தொடர் கால ஓட்டத்தில், பணம் என்ற பரிவர்த்தனை பொருள் அறிமுகமானது. பணம், நிறுவனமயமாகி, வங்கிமயமாகி, மின்னியல்மயமாகி, காலத்தின் கட்டாயமாக தற்போது கிரிப்டோ நாணயங்கள் அறிமுகமாகி உள்ளன. பணம், காசு, காசோலை, கடன் அட்டை, மின் பரிவர்த்தனை அட்டை, மின்னியல் பணமாற்று முறைகளை போன்று கிரிப்டோ கரன்சிகளும் ஒருவகையான பண பரிவர்த்தனை முறையே. 

வங்கிகளும் நவீன அரசாங்கங்களும் உருவான பிறகு பண பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டன. பணத்தை அனுப்பவும், பெறவும், சேவை கட்டணங்கள் விதிக்கப்பட்டன. பணத்தை இந்த நாட்டுக்கு அனுப்பலாம், இந்த நாட்டுக்கு அனுப்ப கூடாது, இப்படித்தான் அனுப்ப வேண்டும், இந்த நிறுவனத்தின் மூலமாக தான் அனுப்ப வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றின் மூலமாக அரசாங்கங்களும் வங்கிகளும் பணத்தை பயன்படுத்தும் மற்றும் பரிமாற்றம் செய்துகொள்ளும் நபர்களிடமிருந்து பல வகைகளில் இலாபம் சம்பாதித்தன.

வங்கிகளின் தலையீடு இல்லாமல் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியாது, கட்டணத்தை செலுத்தவோ பெறவோ முடியாது என்ற நிலை உருவான பிறகுதான் முதன் முதலில் bitcoin பிட்கோயின் என்ற கிரிப்டோ கரன்சி அறிமுகமானது. ப்ளாக்செயின் டெக்னோலோஜியை (blockchain technology) பயன்படுத்தி, இடை தரகர்கள் இல்லாத (peer to peer network) முறையில் பிட்கோயின் வடிவமைக்கப்பட்டது. பிட்காயினின் வெற்றியை தொடர்ந்து பல கிரிப்டோ கரன்சிகள் தொடர்ச்சியாக அறிமுகமாகின.

கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி எல்லையில்லாமல் அத்தனை நாடுகளுக்கும் பணம் அனுப்பலாம், பெறலாம், பொருட்கள் வாங்கலாம், முதலீடாக அல்லது சொத்தாக சேமிக்கலாம். அவற்றை பயன்படுத்த கட்டுப்பாடுகளோ எல்லைகளோ கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு இடைதரகரும் இல்லாமல் கிரிப்டோ வாலெட் மூலமாக பணம் அனுப்பலாம் பெறலாம். இவைதான் கிரிப்டோ கரன்சிகளின் சிறப்புகள்.


 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.