Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

கிரிப்டோ கரன்சிகளினால் (Cryptocurrency) உண்டாக போகும் மாற்றங்கள்


Visa Card, Mastercard, American express, Dinners club, என்று பலவகையான பண பரிவர்த்தனை அட்டைகள் 1958ஆம் ஆண்டு முதலாக சந்தையில் உள்ளன. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே அவை சென்றடைந்துள்ளன. உலகம் முழுவதும் பெரும்பாலான நபர்கள் அவற்றை பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த வேண்டிய தேவைகள் அவர்களுக்கு உருவாகவில்லை. 

ஒன்லைன் பெய்மெண்ட், கிரெடிட் கார்ட் பெய்மெண்ட், சார்ஜ் கார்ட் பெய்மெண்ட், டெபிட் கார்ட் பெய்மெண்ட், செக் பெய்மெண்ட், வாலெட் பெய்மெண்ட், கியூஆர் பெய்மெண்ட், மொபைல் பெய்மெண்ட், என்று பல வகையான கட்டணம் செலுத்தும் முறைகள் நடைமுறையில் வந்துவிட்டன. இருந்தாலும் அன்றாட நடைமுறையில் எத்தனை முறை நாம் அவற்றை பயன்படுத்துகிறோம்?

நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு கட்டணங்கள் அரசாங்கம் வெளியிடும் பணம் மூலமாகவே செலுத்தப்படுகின்றன. மின்னியல் கட்டண முறைகள் மற்றும் வங்கி அட்டைகளின் மூலமாக கட்டணங்களை செலுத்தும் முறைகள் இப்போதுதான் வளரும் நாடுகளில் பிரபல்யமாகி வருகின்றன. அவை பெரும் வரவேற்பை பெறுவதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் ஆகலாம். அவ்வாறு இருக்கையில் நேற்று அறிமுகமான கிரிப்டோ கரன்சிகள் உலகத்தையே திருப்பி போட்டுவிடும். உலக மக்களின் கட்டண முறைகளை முழுமையாக மாற்றிவிடும் என்று கூறுவது வெறும் அனுமானங்கள் மட்டுமே.

வளர்ந்த நாடுகளில் கூட கிரிப்டோ கரன்சிகள் கட்டண முறையாக இன்னும் அமலுக்கு வரவில்லை. இணையதளங்களில் மட்டுமே பெரும்பான்மையாக கிரிப்டோ கரன்சிகள் கட்டண முறையாக அமலில் உள்ளன, அதுவும் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே. நிஜமான கடைகளில் கிரிப்டோ கரன்சிகள் கட்டண முறையாக அமலுக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அவற்றை கட்டணங்களாக ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் கூட Visa card, Mastercard, Debit Card, PayPal, QR payment, Wallet payment போன்று தற்போது பயன்பாட்டில் இருக்கும் கட்டண முறைகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன.

எதனால் கிரிப்டோ கரன்சிகள் அதிகமாக பேசப்படுகின்றன
கிரிப்டோ கரன்சிகள் பயன்பாட்டில் இருக்கும் வரையிலும், போது மக்களிடம் பிரபல்யமாக இருக்கும் வரையிலும் தான் கிரிப்டோ கரன்சிகளை வெளியிடும் நிறுவனங்களும், அவற்றை வைத்தது தொழில் செய்பவர்களும், அவற்றை பெறுபான்மையாக வைத்திருப்பவர்களுக்கும் இலாபம் ஈட்ட முடியும். இந்த காரணங்களால் தான் கிரிப்டோ கரன்சிகளை பெருமைபடுத்தி, அவற்றை உயர்வாக பேசி நிறைய செய்திகள் உலாவுகின்றன. அவற்றை கண்டு ஏமாந்து விடாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள்.

பெரும்பாலும் கிரிப்டோ கரன்சிகளை வாங்குபவர்கள், அவற்றை முதலீட்டுக்காகவும், டிரேடிங் செய்யவும் தான் வாங்குகிறார்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் தேவை இருந்தால் மட்டுமே கிரிப்டோ கரன்சிகளை வாங்குங்கள். கிரிப்டோ கரன்சி என்பவை பணத்தின் இன்னொரு உருவம் அவ்வளவுதான், ஆனால் எந்த வகையான உத்தரவாதமும் இல்லாத பணம். சிந்தித்து கவனமாக செயல்படுங்கள்.



 

எச்சரிக்கை

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.




No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"