Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

404

Sorry, the page you were looking for in this blog does not exist. Back Home

அண்மைய பதிவுகள்

Cryptocurrency கிரிப்டோ கரன்சி பற்றிய சில முக்கியமான விவரங்கள்

கிரிப்டோ கரன்சிகள் உலகத்தின் போக்கையே மாற்றி விட போகிறான், இனிமேல் உலகம் முழுமைக்கும் (bitcoin) பிட்கோயின் தான் பயன்பாட்டில் இருக்க போகிறது என்பதை போன்ற மாயைகளை சிலர் உருவாக்க முயல்கிறார்கள்.

தங்கம், வெள்ளி, நாணயங்கள், பணம், காசு, காசோலை, கடன் அட்டை, மின் பரிவர்த்தனை அட்டை, மின்னியல் பணமாற்று முறைகளை போன்று கிரிப்டோ கரன்சிகளும் ஒருவகையான பண பரிவர்த்தனை முறை அவ்வளவுதான். கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி எல்லையில்லாமல் அத்தனை நாடுகளுக்கும் பணம் அனுப்பலாம் பெறலாம், அவற்றை பயன்படுத்த கட்டுப்பாடுகளோ எல்லைகளோ கிடையாது. இவைதான் இவற்றின் சிறப்புகள்.

கிரிப்டோ கரன்சிகள் மிகவும் பாதுகாப்பாகவை, இலாபம் தரக்கூடியவை, கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்த எந்த சேவை கட்டணமும் கிடையாது என்றும், அவை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் கதைகளை அளந்துவிடுவார்கள், அவை அனைத்தும் வியாபார நோக்கத்துக்காக கூறப்படும் பொய்களே.

Cryptocurrency கிரிப்டோ கரன்சிகளை பற்றிய சில முக்கியமான விவரங்கள்
1. கிரிப்டோ கரன்சிகள் உலகத்தை மாற்ற போவதில்லை.

2. கிரிப்டோ கரன்சிகளை எல்ல இடத்திலும் பயன்படுத்த முடியாது.

3. அனைத்து கிரிப்டோ கரன்சிகளுக்கும் மதிப்பு கிடையாது.

4. கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும் விற்கவும் கட்டணம் விதிக்கப்படும்.

5. தவறான கிரிப்டோ கரன்சிகளை வாங்கிவிட்டால் இறுதிவரையில் அவற்றை பயன்படுத்தவும், விற்கவும் முடியாது. 

6. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அல்லது சரியான தரப்பினரால் வெளிப்பட்ட நாணயங்களுக்கு மட்டுமே மதிப்பும் விலையும் உள்ளன.

7. கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் பொய்யான நாணயங்கள் அதிகம் உள்ளன.

8. அறவே சந்தை மதிப்பு இல்லாத கிரிப்டோ கரன்சிகள் நிறைய உள்ளன.

9. கிரிப்டோ நிறுவனம் என்ற பெயரில் நிறைய பொய்யான இணையதளங்களும் உள்ளன.

10. எச்சரிக்கையாக இருக்காவிட்டால் மொத்த முதலீடும் கரைத்து விடும்.

11. கிரிப்டோ கரன்சியை தவறுதலாக வேறு நபர்களுக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.

12. உங்களுக்கு யார் கிரிப்டோ அனுப்புகிறார்கள் அல்லது நீங்கள் யாருக்கு கிரிப்டோ அனுப்புகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்காது.

13. ஒருவர் அனுப்பி மற்றவருக்கு கிடைக்க வில்லை என்றால் அந்த கோயின்களை தேடி மீட்பது கடினம்.

14. உங்களின் கிரிப்டோ வால்ட் விவரங்கள் மற்றவர்களுக்கு தெரிந்தால் உங்களுக்கு தெரியாமலேயே வாலெட்டில் இருக்கும் மொத்த தொகையையும் திருடிவிட முடியும்.

 
எச்சரிக்கை
கிரிப்டோ கரன்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், இலாபகரமாகவும் தெரியும். ஆனால் ஆபத்துக்கள் நிறைந்தவை, எச்சரிக்கையாக இருக்காவிட்டால், நஷ்டங்கள் உண்டாகிவிடகூடும். கிரிப்டோ கரன்சிகளின் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment

மனித வாழ்க்கைக்கான அர்த்தம் தேடி தொடங்கிய பயணத்தில் நான் கண்டுகொண்ட விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்தபின் உங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நமது இணையதளங்கள்: holisticrays.com, Reiki Tamil, பதில்

"மின்னஞ்சல் மூலமாகா புதிய கட்டுரைகளை நேரடியாகப் பெறுவதற்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்"