தங்க நகைகளை அடகு வைக்காதீர்கள்

 

ஆத்திர அவசர நேரங்களில் தங்க நகைகளை அடகு வைப்பது இப்போது சகஜமாக நடக்கும் இரு விசயம், ஆனாலும் இதை தவிர்க்க வேண்டும். 

தவிர்க்க முடியாத ஆபத்து அவசர காலங்களில் நகைகளை அடகு வைத்தும், மற்ற விஷயங்களை அடகு வைத்தும் கடன் வாங்கி செலவு செய்வதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனாலும் நாளடைவில் அந்த பழக்கம், பணம் தேவைப்பட்டால் அடகு வைத்துக்கொள்ளலாம் என்ற மன நிலைக்கு கொண்டு செல்கிறது. முடிவில் எதற்கெடுத்தாலும் அடகு வைப்பதும் வட்டி கட்டுவதும் பழகிவிடுகிறது.

தங்க நகைகளை அடகு வைத்தால் பணம் இருக்கும் போது திருப்பிக் கொள்ளலாம் என்ற அலட்சிய போக்கு பலருக்கு உருவாகிவிடுகிறது. ஆபத்து அவசர காலங்களில் அடகு வைக்க தொடங்கி பின்பு, பண்டிகை, கொண்டாட்டம், துணிமணிகள் வாங்க, சுற்றுலா செல்ல என்று நீள்கிறது.

பணம் தேவைப்பட்டால் தங்க நகைகளை அடகு வைத்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய போக்கு, உடனடியாக அவசர காலங்களில் எவ்வாறு பணம் புரட்டுவது என்பதை சிந்திக்க விடாமல் செய்வதுடன்; குறுக்கு வழியில் உடனடியாக பணம் திரட்ட நகைகளை அடகு வைக்கலாம் என்ற எண்ணம் உருவாகிறது. அடகு வைக்கும் பழக்கத்தினால் தேவையில்லாமல் வட்டி என்ற பெயரில் பணம் செலவாகும். அடகு, வட்டி, கடன் என்று தொடர்ந்து அனாவசிய செலவுகள் அதிகரித்து கடனை அதிகரிக்கும், செல்வத்தை பாழாக்கும்.

முடிந்த வரையில் கடன் வாங்காமல் அடகு வைக்காமல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பழக வேண்டும். தேவைகளையும் ஆசைகளையும் சுருக்கி செலவை குறைக்க வேண்டும்.

செல்வம் சேர்க்க பல வழிமுறைகள் உள்ளன அவற்றில் ஒன்று வருமானத்தை அதிகரிப்பது. இப்போது நமக்கு என்ன வருமானம் வருகிறதோ அதை தவிர்த்து புதிய வருமானம் வருவதற்கு வழி தேட வேண்டும். மற்றொரு வழிமுறை செலவுகளை குறைப்பது. தற்போதைய வருமானத்தை அதிகரிக்க முடியாமல் போனாலும், தற்போது செய்யும் செலவுகளை குறைத்தாலே வரும் வருமானத்தில் ஒரு பகுதியை மிச்சப்படுத்த முடியும்.

அடகு வைக்காமல், கடன் வாங்காமல், வரும் வருமானத்தை கொண்டு செலவு செய்ய தொடங்கினாலே, நாளடைவில் அதிலிருந்தும் மிச்சப்படுத்தும் ஆற்றல் தானாக உருவாகும்.

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.