மருத்துவ குறிப்பு - எனிமா

எனிமா என்பது ஆசனவாய் மூலமாக வெந்நீரை மல குடலுக்குள் அனுப்பி, நாட்பட்ட கழிவுகளையும் நாட்பட்ட மலங்களையும் உடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையாகும்.

உடலில் தேங்கும் மலங்களும் கழிவுகளும் தான் மனிதர்களுக்கு உண்டாகும் அனைத்து வகையான உடல் உபாதைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பதனால், இந்த வழிமுறை உடலில் தேங்கியுள்ள பழைய மலங்களை வெளியேற்றவும், நோய்களை குணப்படுத்தவும் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

நாட்பட்ட உடல் உபாதைகள் உள்ளவர்கள், கொடிய நோய்கள் உள்ளவர்கள், அதிக உடல் பருமனாக உள்ளவர்கள், நாட்பட்ட மலச்சிக்கல், மூச்சு திணறல், தோல் நோய் உள்ளவர்கள், இந்த மருத்துவத்தை முயற்சி செய்துபாருங்கள். பெரிய மாற்றம் உண்டாகும்.

எனிமா பை ஒன்றை வாங்கிக் கொள்ளவும். இயற்கை மருந்து கடைகளிலும் இணையதளங்களிலும் எளிதாக கிடைக்கும். காலை வேளையில், சூரியன் உதித்த பிறகு ஒரு லிட்டர் வெதுவெதுப்பான வெந்நீரை தயார் செய்து கொள்ள வேண்டும்.

கழிவறைக்கு வழக்கம் போல் மலம் கழித்துவிட்டு அறை மணி நேரம் கழித்து, எனிமா குழாயை ஆசன வாயின் மூலமாக உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். எண்ணை போன்ற போன்றவற்றை பயன்படுத்தினால் எளிதாக நுழையும்.
 
நின்றுக்கொண்டு, கால்களை ஒட்டிக்கொண்டு, எனிமா புட்டியில் தயார் செய்த வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி மல குடலுக்குள் செலுத்தலாம். நின்றுக்கொண்டு செய்வதைக் காட்டிலும் படுத்துக்கொண்டு எனிமா எடுப்பது இன்னும் சிறந்தது, அதிக நேரம் வெந்நீர் குடலில் தங்கும். நின்றுக் கொண்டிருந்தால் தண்ணீர் உடலை விட்டு விரைவில் வெளியேறும்.

குறைந்தது 15 நிமிடங்கள் தண்ணீரை வெளியேற விடாமல் அடக்கிக்கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் வரையில் வைத்திருக்கலாம்.

ஆசனவாய் மூலமாக உடலுக்குள் சென்ற வெந்நீர் பழைய மலங்களை இலகுவாக்கி உடலை விட்டு வெளியேற்றும். முதல் கட்டமாக மலம் வெளியேறியதும், மீண்டுமொரு முறை அதைப்போன்று செய்யலாம். இதைப்போன்று ஒரு நாளை ஒரு முறையென்று மூன்று நாட்களுக்கு தினம் பழைய மலங்களை வெளியேற்ற வேண்டும்.

மூன்று நாட்களுக்கு பிறகு மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களும், நெஞ்சு சளி உள்ளவர்களும் அதிக நேரமும், அதிக முறைகளும் செய்ய வேண்டாம்.

ஒரே நாளில் அல்லது விரைவாக மலங்களை வெளியேற வேண்டும் என்று எண்ணாமல், படி படியாக வெளியேற்ற வேண்டும். பல வருடங்களாக சேர்ந்த மலம் அதனால் அவசரபடுவதில் அர்த்தமில்லை.

ஒரு மாதத்திற்கு பிறகு எளிதாக மலம் வெளியேறுமானால், இந்த மருத்துவத்தை நிறுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு தேவைப்படும் நாளன்று மட்டுமே பயன்படுத்தலாம்.


To Top