கோவிட் 19 பேண்டமிக் விளைவுகள்

நமது அன்பர்களில் ஒருவரான டென்மார்க் நாட்டில் வசிக்கும் திருமதி அகிலா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

அவர் ஒரு ஆங்கில கட்டுரையை எனக்கு அனுப்பி இந்த கட்டுரை கூறும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று உங்கள் ஸ்டைலில் கூறுங்கள் என்றார். இன்று காலை முதல் இந்த கோவிட்டுக்கு பிந்திய வாழ்க்கை எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை நமது உறுப்பினர்களுடன் zoom சந்திப்பில் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதற்கு ஏற்ற வகையில் அவரின் கேள்வியும் அமைந்தது, அதனால் எழுதத் தொடங்கினேன்.

உலகம் முழுவதும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான மாற்றங்கள் உருவாகி இருப்பது அனைவரும் உணர்ந்ததே. கோவிட் என்ற பெரும் அலைக்குப் பிறகு குடும்பம், தொழில், சமுதாயம், அரசாங்கம், உணவு, மருத்துவம், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்து நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெரும் நிறுவனங்களும், அமைப்புகளும், அரசாங்கங்களும், நியூ நோர்மல் (new normal) என்ற ஒரு ஒடுக்குமுறையை உலக மக்களில் மீது திணிக்க முயல்கின்றன. முயல்கின்றன என்று சொல்வதைவிடவும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பாதி அளவு நடைமுறை படுத்திவிட்டன என்றுதான் கூற வேண்டும். இன்னும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தப்படக் காத்திருக்கின்றன.

உலக அரசியலுக்குள் நுழையாமல், இந்த நியூ நோர்மல் என்ற ஒடுக்குமுறை நமக்கும் நமது குடும்பத்துக்கும் என்னென்ன மாற்றங்களை உருவாக்கப் போகின்றன என்பதை பார்ப்போம். திருமதி அகிலா அவர்கள் அனுப்பிய ஆய்வு கட்டுரை என்ன சொல்கிறது என்றால் கோவிட் பேண்டமிக் உருவான பிறகு டென்மார்க்கில் ஐந்தில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு உருவாகியுள்ளது என்று கூறுகிறது.

குறிப்பாக குறைவாகப் படித்த மக்களைவிடவும் அதிகம் படித்த மக்களே அதிகமாக மனநல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. ஆய்வில் கலந்துகொண்ட மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் தனக்கோ, தன் குடும்பத்தாருக்கோ, தனது உறவினர்களுக்கோ கிருமித் தொற்று அல்லது நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர். இந்த மனநிலையில் தான் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களை குறை கூற முடியாது, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், மற்றும் இணையம் மூலமாக இந்த அச்சம் மக்களின் மனதில் பதியப்படுகிறது. இதில் ஒரு இக்கட்டான சூழ்நிலை என்னவென்றால் கோவிட் 19 என்ற கிருமியை பற்றி அனைவரும் கண்டிப்பாக அச்சம் கொள்ள வேண்டும், அரசாங்கங்கள் கூறுவதைக் கேட்டு நம்பி கடைப்பிடிக்க வேண்டும், இல்லையென்றால் அபராதமும் சிறையும் காத்திருக்கின்றன என்று அரசாங்கங்கள் மிரட்டுகின்றன.

கழுதைக்கு வாக்கப்பட்டால் உதை வாங்கி தான் ஆக வேண்டும் என்ற பழமொழிக்கு ஒப்ப, ஒரு அரசாங்கத்துக்குக் கீழ் நாம் வாழும் போது அதற்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அரசாங்கத்துக்கு கட்டுப்படுதல் என்பது அச்சத்தை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருளாகாது. தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ் அல்லது இணையத்தில் வெளிவரும் அனைத்தும் உண்மை என்று நம்புவது தவறு. அரசாங்கம் உண்மையை மட்டும்தான் பேசும் நமக்கு நன்மையான விசயங்களை மட்டும்தான் செய்யும் என்று நம்புவது அதைவிடத் தவறு.
 
கிருமிகளைக் காட்டி மக்களை பயமுறுத்தும் பழக்கம் பல நூறு ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்களிடமும் அரசாங்கங்களிடமும் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் சில தான் அண்மை காலங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட சார்ஸ், மெர்ஸ், பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், தற்போதைய கோவிட் 19 போன்றவை எல்லாம்.

மனிதர்களுக்கு காய்ச்சல் வருவது இயல்பு, காய்ச்சல் கண்டவர்களுக்கு வாசனையும் ருசியும் தெரியாமல் போவது இயல்பு, தொண்டை வறண்டு போவதும் மூச்சுத் திணறல் உண்டாவதும் இயல்பு. இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்கு உண்டாகும் தொந்தரவுகளுக்கு கோவிட் 19 என்று பெயர் சூட்டி மக்களை மிரட்டுகிறார்கள். இதற்கு பின்னால் இதனால் பயனடையக் கூடிய, பல பன்னாட்டு நிறுவனங்களும், சில அரசாங்கங்களும், சில கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள். இவர்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, ஆனால் இந்த வலையிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளலாம்.

முதலில் கிருமிகளினால் நோய்கள் உண்டாகாது, குறிப்பாக மரணங்கள் உண்டாகாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முதல் சான்று உலகம் முழுமைக்கும் காற்றில் பல இலட்ச வகையான கிருமிகள் பரவியிருந்தும் நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்கள். இரண்டாவது உங்களுக்கு கண்டிப்பாக காய்ச்சல் உண்டாகி பின் குணமாகி இருக்கும். மூன்றாவது கோவிட் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்; இருந்தும் உலகம் முழுமைக்கும் பல இலட்சம் கோவிட் நோயாளிகள் நோய் உறுதி செய்யப்பட்டு பின், ஒரு சில நாட்களிலேயே குணமாகி வீடு திரும்பியுள்ளார். நோய் கண்டு மருந்து இல்லாமலேயே குணமானவர்களை விடவா ஒரு சாட்சி வேண்டும்?

தொடரும்….


To Top