உனக்காகக் காத்திருக்கும் நிமிடங்கள்

 

உனக்காகக் காத்திருக்கும்
நிமிடங்களை விட – உன்னைக்
காணாமல் திரும்பிச்செல்லும்
நிமிடங்களில் மனதின் 
வேதனையை உணர்கிறேன்

கரைத்தேடும் அலைகள்
வெறுமையோடு கடல் 
திரும்புவதைப் போன்று 
தனிமையோடு திரும்புகிறேன்

மறுபடியும் உன்னைக் 
காணும் நொடி வரையில்
கடல் மணலாய் - கரைந்து
காய்ந்து கொண்டிருக்கிறேன்

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.