திருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை


வணக்கம்,

திருக்குறளில் அத்தனையும் அடங்கியுள்ளன என்று கூறும் அளவுக்கு, மனிதர்களின் வாழ்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வழிகாட்டக்கூடிய அத்தனை விசயங்களையும், மிக எளிமையாக திருவள்ளுவ ஆசான், நமக்கு வகுத்து வழங்கியுள்ளார். திருக்குறளில் இல்லையென்றால் அது மனித வாழ்க்கைக்குத் தேவையற்றது என்பதையும் அறுதியிட்டுக் கூறலாம்.

ஒவ்வொரு விசயத்தையும் விரிவாகவும், பல அதிகாரங்களாகவும் விரித்து விளக்கிய ஆசான், மனிதர்களின் ஆரோக்கியம் என்று வரும் போது மிக எளிமையாக, ஒரே அதிகாரத்தில் சில தகவல்களை மட்டுமே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மனிதர்கள் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகக்கூடிய காரணங்களையும், நோய்கள் அண்டாமல் தவிர்க்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் எளிய வழிமுறைகளையும் மட்டுமே விளக்குகிறார்.

அதிகாரத்தின் தலைப்பு மருந்து ஆனால் உட்கொள்ளக்கூடிய, அல்லது உடலின் வெளியில் பயன்படுத்தக்கூடிய மருந்துகளைப்பற்றி அவர் எதையுமே கூறவில்லை. நோய்களைக் குணப்படுத்தக் கூடிய எந்த மருந்தையும் அவர் பரிந்துரைக்கவும் இல்லை. இது ஏன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு தோன்றிய புரிதல்.

மருந்து அதிகாரத்தின் பத்து குறள்களிலும் கூறப்படும் ஒழுக்கங்களை முழுமையாகப் பின்பற்றினால் உடலின் உள்ளேயும் வெளியிலும் எந்த நோயும் உண்டாகாது; ஒருவேளை தற்போது நோய் உள்ளவர்களாக இருந்தால் அவை எளிதில் குணமாகும். அதனால் அவர்களுக்கு மருந்துகளைப்பற்றி கூற தேவையில்லை என்று திருவள்ளுவர் நினைத்திருக்கக் கூடும். 

ஒரு மனிதர் இந்த பத்து பாடல்களில் உள்ளவற்றை பின்பற்றாவிட்டால் அவரின் நோய் எந்த மருத்துவம் பார்த்தாலும் முழுமையாக குணமாகாது. அதனால் அவருக்கும் மருந்துகளினால் எந்த பயனும் உண்டாகாது.

சுருக்கமாக சொல்வதானால், மருந்து அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களை முழுமையாக புரிந்துகொண்டு பின்பற்றினால் மருந்துகளின் துணையில்லாமலே எந்த நோயாக இருந்தாலும் குணமாகும். அதைப்போன்றே இந்த அதிகாரத்தின் பத்து பாடல்களில் உள்ளவற்றை பின்பற்றாமல் எந்த மருந்தை உட்கொண்டாலும் நோய்கள் முழுமையாக குணமாகமாட்டா.

அன்புடன்
ராஜா முகமது காசிம்

ரெய்கி மாஸ்டர் & அக்குபங்சரிஸ்ட்
healerrmk@gmail.com

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.