வாசிப்பு பழக்கம்


இணையம் வந்தது நாளிதழ்கள் அழிந்தன. மக்களிடையே வாசிக்கும் பழக்கம் மறைந்து போனது. வாசிப்பிலிருந்து படம் மற்றும் காணொளிகளை பார்க்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துவிட்டன.

சில நாளிதழ்கள், மக்கள் எவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை எழுதாமல் மக்கள் மீது எவற்றையெல்லாம் திணிக்க வேண்டுமோ அவற்றை எழுதி வெளியிட்டன. அதனால் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் குறைந்ததும் ஒரு வகையில் நன்மைதான்.

இதன் மூலமாக தேவையற்ற மற்றும் பயனற்ற தகவல்கள் மக்களின் கண்களுக்கு படாமல் தவிர்க்கலாம். மக்களின் மனதிலும் தகவல் என்ற பெயரில் குப்பைகள் சேராமல் தவிர்க்கலாம். ஆனால் அதே சூழ்நிலையில் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதால், சில முக்கியமான தகவல்களும் நிகழ்வுகளும் பொது மக்களுக்கு தெரியாமல் போகலாம்.

இணையதளங்கள் அதிகமாக உருவான பிறகு, இந்த முழு உலகமும் ஒரு சிறு டப்பவுக்குல் அடைத்துவிட்டதை போன்று ஆகிவிட்டது. இணையதளங்களில் தேடினால் எந்த விசயத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

ஆனால் என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் எவற்றை தேடவேண்டும், எவற்றை வாசிக்க வேண்டும், எவற்றை வாசிக்க கூடாது என்பது மக்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.

நாளிதழ்களோடு நின்ற பொழுது பத்திரிக்கை அலுவலகமோ, அரசாங்கமோ அவற்றை கட்டுப்படுத்த ஒரு வாய்பிருந்தது. கட்டுபாடற்ற இணையம் என்று உருவான பிறகு, எந்த கட்டுப்பாடுமின்றி யாரும் எதையும், எழுதலாம், வெளியிடலாம், பரப்பலாம், என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

இதன் காரணமாக தேவையற்ற மற்றும் பயனற்ற செய்திகள் நம்மை WhatsApp, Telegram, Facebook, மற்றும் பல இணைய சேவைகளின் மூலமாக வந்தடைய தொடங்கி விட்டன. நாமும் அவற்றை வாசிக்கப் பழகிவிட்டோம்.

இந்த பழக்கம் நம் மனதில் தேவையற்ற, வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாத பல தகவல்களை பதிவதற்குக் காரணமாகிவிட்டன.

இதை மாற்ற வேண்டும், நாம் காணும், மற்றும் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையும், வரியும் நமக்கு தேவையா? பயனுள்ளதா? நமது வாழ்க்கைக்கு உதவுமா? என்பதை சிந்தித்து வாசிக்க பழக வேண்டும்.

நல்ல பயனான விசயங்களை, பார்ப்போம், வாசிப்போம், கற்றுக் கொள்வோம்.

To Top