வரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்
முன்பு எங்களின் மாதம் குடும்ப வருமானம் ஐயாயிரம் ரூபாய் மட்டுமே. குடும்பம் சற்று சிரமமான சூழ்நிலையில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக இதே சூழ்நிலை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறிய மாற்றம் குடும்ப வருமானம் சற்று அதிகரித்து மாதம் பத்தாயிரம் ரூபாய் ஆனது. சற்று ஆறுதலான விசயம் தான் ஆனாலும் வருமானம் போதவில்லை.
வீட்டுக்காரர் வெளி நாட்டுக்கு வேலைக்குச் சென்றபிறகு குடும்ப வருமானம் சற்று அதிகரித்தது. தற்போது மாதம் இருபதாயிரத்துக்கு மேல் வருமானம் வருகிறது.
கணவர் வெளிநாட்டுக்குச் சென்ற சம்பாதித்தால் வாழ்க்கை மாறும் வீட்டின் பொருளாதார நிலைமை மாறும் என்று நினைத்தோம் ஆனாலும் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை.
வரும் வருமானம் மாத செலவுக்கும் கடன்களைத் திரும்பச் செலுத்தவும் சரியாக இருக்கிறது. பணத்தை மிச்சப்படுத்தவோ, சேமிக்கவோ முடிவதில்லை.
▪ இது பெரும்பான்மையான குடும்பங்களின் நிலைமை.
▪ எதனால் இவ்வாறான சூழ்நிலை உருவாகிறது?
▪ இதற்குத் தீர்வு என்ன?
▪ இதை மாற்ற என்ன வழி?
உங்களின் பதில்களையும், கருத்துக்களையும் கீழே கமெண்ட் செய்யுங்கள்.
அடுத்த கட்டுரையில் மேற்கொண்டு சிந்திப்போம்.