இது மேகத்தின் காதல்

 

காற்றின் ஈரப்பதத்தை
சிறுகச் சிறுக கோர்த்து மொத்தமாக சேர்த்து வைக்கும் மேகம் மழைக்காலத்தில் சேர்த்து வைத்த அத்தனையும் மடைத்திறந்து பொழியும் பூமியெங்கும் குளிரும் சிறுகச் சிறுகச் சேர்த்த சிறுகச் சிறுக வளர்த்த நினைவுகள் அனைத்தையும் உன்மீது பொழிந்துவிட்டேன் அன்பாக காதலாக கவிதையாக அதில் நனைவதும் குடைபிடித்து கடந்துசெல்வதும் உன் விருப்பம் - ஆனால் எத்தனை குடைபிடித்தாலும் மழை நிற்கப்போவதில்லை பெய்துகொண்டே இருக்கும் இது மேகத்தின் காதல்

To Top