வீட்டு மருத்துவம், பயன்பாட்டு மருத்துவம், மற்றும் கை மருத்துவம்


மருத்துவத் துறைகள் பெரிதாக வளர்ச்சி அடைவதற்கு முன்பாக மனிதர்கள் வாழ்ந்தார்கள் இல்லையா? அவர்களுக்கு நோய்கள் உண்டாகி இருக்குமா இருக்காதா? சிந்தித்துப் பாருங்கள்.

அந்த மனிதர்கள் எவற்றைக்கொண்டு தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொண்டிருப்பார்கள்? சித்த மருத்துவம், ஆயுர்வேதம் , யுனானி, போன்ற மருத்துவங்கள் உருவாவதற்கு முன்பாகவே மனிதர்கள் தங்களின் நோய்களை தாங்களே குணப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மருத்துவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், விளம்பர யுத்திகளினாலும் மனிதர்கள் எந்த நோய் வந்தாலும் ஆங்கில மருத்துவத்தை நாடலாம், அவர்கள் குணப்படுத்திவிடுவார்கள் என்று அலட்சியமாக இருக்கிறார்கள். எந்த உடல் உபாதையாக இருந்தாலும் ஆங்கில மருத்துவத்தில் குணமாகிவிடும் என்ற அறியாமை பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கிறது. இது ஒரு தவறான நம்பிக்கையாகும், இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்.

மனிதர்கள் தங்களின் நோய்களை தாங்களே குணப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் அவற்றை கற்றுத்தர வேண்டும். நோய் கண்ட பின்பு குணப்படுத்துவதை விடவும் நோயில்லாமல் வாழ அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனித இனம் தோன்றிய காலம் முதலாக மனிதர்களுக்கு உண்டாகிய ஒவ்வொரு தொந்தரவுக்கும் ஒவ்வொரு உடல் உபாதைக்கும் தீர்வை தேடி கண்டுபிடித்தார்கள். 

ஒரு மனிதனுக்கு ஒரு தொந்தரவு உண்டாகும் போது அவன் அதற்கு தீர்வை கண்டுவிட்டான் என்றால், அடுத்த மனிதர்களுக்கோ பிற்காலத்தில் பிறக்கும் மனிதர்களுக்கோ அதே உடல் உபாதை உண்டாகும்போது, ஏற்கனவே தொந்தரவை அனுபவித்த மனிதனின் அறிவும், அனுபவமும், தீர்வும், வழிகாட்டியாக இருக்கும்.

ஒரு மனிதன் அனுபவித்த துன்பத்தை அடுத்த மனிதனின் அனுபவிக்க வேண்டும் என்று எந்த தேவையும் உண்டாகாது. ஒருவனின் அனுபவமே மற்றவனை காக்கும். இவ்வாறுதான் மருத்துவங்கள் உண்டாகின, வளர்ச்சியடைந்தன.

உடலையும் மனதையும் எவ்வாறு பராமரிக்க வேண்டும்? எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டும், அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். 

வீட்டு மருத்துவம், பயன்பாட்டு மருத்துவம், மற்றும் கை மருத்துவங்களை பாதுகாப்போம் அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம்.To Top