ஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...
ஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந்த மருத்துவ குறிப்புகளை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்களை பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். அவற்றை ஒன்று சேர்க்க வேண்டும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டுவர வேண்டும். அந்த மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் ஒவ்வொருவரையும் சென்று சேர நம்மால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
அந்த முயற்சியின் முதல் படியாக ஒவ்வொரு நபரும் அவர்களுக்குத் தெரிந்த கை வைத்தியங்களை, வீட்டு வைத்தியங்கள், எனக்கு எழுதி வாட்ஸாப்ப் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் அவற்றை நமது இணைய தளத்தில் வெளியிடலாம். அவை நோய்கண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ விரும்பும் பலருக்கும் உதவியாக இருக்கும்.
மனிதர்களுக்கு நல்ல விசயங்களைச் சொல்ல ஞானிகளும் சித்தர்களும் பிறந்து வர வேண்டும் என்றில்லை, நாமும் செய்யலாம்.
நீங்கள் அனுப்பும் மருத்துவ குறிப்புகள் நீங்கள் வாசித்தவையாக இல்லாமல், நீங்கள் பயன்படுத்தி பயன்பெற்றவையாக இருக்கட்டும். உங்கள் மருத்துவ குறிப்புகளை எழுத்துவடிவிலோ குரல் பதிவாகவோ அனுப்பலாம்.
Raja Mohamed Kassim
https://www.rmtamil.com
Send Email
+60177516171 WhatsApp Only
No comments