சில மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?

 

வாசகரின் கேள்வி: 

முற்காலத்தில் சில ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?

பதில்:

உண்மையைச் சொல்வதானால் தமிழிலோ, தமிழினத்திலோ ஜாதிகள் இருந்ததில்லை. செய்யும் தொழிலைக்கொண்டும், வாழும் நகரத்தைக் கொண்டும் மனிதர்கள் இனங்காணப்பட்டார்கள். அதுவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத அடையாள பிரிவுகள் மட்டுமே. 

இப்போதும் சில வேளைகளில் நாம் பயன்படுத்துகிறோமே, அவர் மதுரைக் காரர், திருச்சிக்காரர், சென்னைக்காரர், இவர் மெக்கானிக், மருத்துவர், வியாபாரி, தொழிலாளி, என்பதைப் போல, ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லாமல் தொழிலையும் ஊரையும் கொண்டு இனம் காணப்பட்டார்கள்.

தொடக்கக் காலத்தில் அனைவரும் கோயில்களுக்குச் சென்று, சுயமாக தன் மனதுக்கு ஏற்ப தெய்வங்களை வழிபடும் முறைதான் இருந்து வந்தது. நமது சமுதாய அமைப்பில், சமூக வாழ்வும், ஒற்றுமையும், அன்பும் மிகவும் முக்கியமாகப் பேணப்பட்டன. அவற்றை கட்டிக்காக்க தனி மனித ஒழுக்கம் முக்கியமாக கருதப்பட்டது.

அதனால் சுய ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். சமுதாய கட்டுப்பாட்டை மீறிய மற்றும் தீய குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கு கோயிலுக்குள் நுழைய முன்காலத்தில் அனுமதி மறுத்தார்கள். 

கால ஓட்டத்தில் ஒரு சிலரின் பண ஆசை, பதவி ஆசை, ஜாதிய ஒடுக்குமுறையென பல காரணங்களால் தனி மனித ஒழுக்கத்தினால் என்ற கட்டுப்பாடு, இனம், ஜாதி, குலம் பார்த்து வழிபட்டுத் தளங்களில் அனுமதிப்பது என்று மாறிப் போனது. 


To Top