கட்டிடங்களுக்கான எனர்ஜி டெஸ்ட்

கட்டிடங்களுக்கான எனர்ஜி டெஸ்ட் - ஆற்றல் பரிசோதனை
வீடு, கடை, தொழிற்சாலை, போன்ற கட்டிடங்களில் இருக்கும் ஆற்றலின் தன்மையை இந்த எளிய முறையைப் பயன்படுத்தி சோதனை செய்து பார்க்கலாம். இந்த பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்:

கண்ணாடி அல்லது கல் குவலை, பழுதில்லாத எலுமிச்சை பழம், சுத்தமான தண்ணீர்.

கட்டிடத்தின் ஒவ்வொரு இடத்திலும் ஆற்றலின் தரம் மாறுபட்டதாக இருக்க வாய்ப்புள்ளதால், வரவேற்பறை, வழிபாட்டு அறை, சமையல் அறை, உறங்கும் அறை என்று தனித் தனியாக சோதனை செய்து பார்ப்பது நல்லது.

எத்தனை இடங்களில் சோதனை செய்ய விரும்புகிறீர்களோ அத்தனை கண்ணாடி அல்லது கல் குவலைகளைத் தயார் செய்து கொள்ளவும்.

ஒவ்வொரு குவலையிலும், ஒரு எலுமிச்சை பழம் நன்றாக மிதக்கும் அளவுக்கு தண்ணீரை முழுமையாக நிரப்பி; ஒரு எலுமிச்சை பழத்தைப் போட்டு, தேவையான இடத்தில் வைக்கவும்.

சோதனையின் முடிவுகள் 

1. பழம் முழுகாமல் மிதந்தால் அந்த இடத்தில் நல்ல ஆற்றல்கள் அதிகமாக உள்ளன என்று பொருளாகும்.

2. பழம் தண்ணீரில் மிதக்காமல் முழுகிவிட்டால் அந்த இடத்தில் நல்ல ஆற்றல்கள் குறைவாகவும், தீய ஆற்றல் அதிகமாகவும் இருக்கின்றன என்று பொருளாகும்.

3. பழம் அழுகிவிட்டால் தீய ஆற்றல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளன என்று பொருளாகும்.

தீய ஆற்றல் என்றவுடன் எதையாவது கற்பனை செய்துகொண்டு அச்சப்படத் தேவையில்லை. கண்ணேறு, திருஷ்டி, போட்டி, பொறாமைகள் காரணமாகவும் பழம் முழுகலாம். வீட்டுக்கு வந்து செல்லும் வெளி நபர்களின் காரணமாகவும் பழம் முழுகலாம், வெளியிலிருந்து நம்முடன் ஒட்டிவரும் தீய ஆற்றல்களாலும் பழம் முழுகலாம். 

குவளையில் போட்ட பழம் முழுகிவிட்டால் அச்சப்படத் தேவையில்லை, ஒரு சில நாட்களில் அங்குள்ள ஆற்றல்கள் சீராகி மீண்டும் பழம் மிதக்கத் தொடங்கும்.

ஒருவேளை பழம் அழுகிவிட்டாலும் அச்சப்படத் தேவையில்லை. அழுகிய பழத்தை நீக்கிவிட்டு, குவலையைச் சுத்தப்படுத்தி, மீண்டும் தண்ணீரும் பழமும் இட்டு வைக்கவும்.

எலுமிச்சை பழத்தில் உண்டாகும் மாறுதல்களை வைத்து அந்த இடத்தில் உண்டாகும் சக்தி நிலை மாற்றங்களைக் கணித்து விடலாம்.

எலுமிச்சை பழம் அழுகிவிட்டால் அல்லது காய்ந்துவிட்டால் மட்டுமே மாற்ற வேண்டும். நன்றாக இருந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் மாற்றத் தேவையில்லை.

எலுமிச்சை பழம் நிரந்தரமாக மிதக்கும் வரையில் மீண்டும் மீண்டும் செய்துவரவும். தீய ஆற்றல்கள், மற்றும் தீய அலைகள் விலகி வீட்டில் சுபிச்சம் உண்டாகும். 

நல்லதே நடக்கும். சந்தோசம்.


To Top