திருக்குறள் எண்: 338 | அதிகாரம்:நிலையாமை(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:338)

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே,

உடம்போடு உயிரிடை நட்பு


குறள் விளக்கம்

பறவைகள் முட்டையினுல் உருவாகின்றன, ஆனால் முட்டை என்பது பறவைகள் வாழும் இடமல்ல. முட்டையில் வளர தொடங்கும் பறவை, முட்டையின் மீது பற்றுக்கொண்டு, முட்டையிலேயே வாழ்வதற்கு முயற்சி செய்வதில்லை. அதன் வளர்ச்சியானது நிறைவடைந்ததும், அந்த முட்டையை உடைத்துக்கொண்டு பறவையாக வெளியில் பறக்கின்றது.


அதைப்போலவே ஆன்மாக்கள் இந்த பூமிக்கு வரும்போது உடலுடன் வருகின்றன; ஆனால் உடல் என்பது ஆன்மாக்கள் நிரந்தரமாக வாழும் இடமல்ல. மனித உடலோடு பிறந்தாலும், ஆன்மாவின் வளர்ச்சி பூர்த்தியனதும் ஆன்மா உடலை உதறிவிட்டு வெளியில் பறந்துவிடும்.


உடலோடு பூமியில் வாழும் ஆன்மாவானது அசைவின்றி இருப்பதனால், முட்டையினுல் வாழும் பறவை குஞ்சுக்கு உவமானமாக கூறுகிறார். உடலை துறந்த ஆன்மாவானது, சுதந்திரதமாக இயங்க தொடங்குவதனால் அசைய, நடக்க, ஓட மற்றும் பறக்க கூடிய பறவைக்கு உவமானமாக கூறுகிறார் திருவள்ளுவர்.


பிறப்பும், வாழ்க்கையும் வளர்ச்சி என்றும், மரணம் என்பது அடுத்த கட்டத்துக்கு நகரும் வளர்ச்சி என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்.


To Top