சிசேரியன் எனும் வியாபாரமும் கூலிப்படைகளும்

இன்றைய கால கட்டத்தில் கர்ப்பமுற்ற தாய்மார்கள் சிசேரியன் செய்து அல்லது வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் செயல் அதிகரித்துவிட்டது. தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையினால் குழந்தையை ஈன்றெடுக்க முடியாமல் தவிக்கும் சில தாய்மார்களுக்கு, தவிர்க்க முடியாத காரணங்களால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க நேரிடலாம். ஆபத்தான சூழ்நிலையின் காரணமாக மட்டுமே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

இதே நாட்டில் சில மருத்துவர்கள் பணத்துக்காக சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்களுக்குக் கூட ஏதாவது பொய்யான காரணம் கூறி, அவரையும் அவரின் குடும்பத்தாரையும் மிரட்டி, வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். 

கேவலம் 20 ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்பதற்காக இந்த பாவச் செயலை துணிந்து செய்கிறார்கள். இந்த உலகில் மனிதர்கள் செய்யும் அத்தனை பாவங்களும் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் ஏதாவது ஒரு வழியில் திரும்பவரும் என்ற அச்சமில்லாமல் கூலிப்படைகளைப் போன்று செயல்படுகிறார்கள். கூலிக்கு கை கால்களை வெட்டுபவர்களுக்கும் பணத்துக்காக கர்ப்பமுற்ற பெண்களின் வயிற்றைக் கிழிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவர்களை மருத்துவர்கள் என்று கூறக்கூடாது, மருந்து வியாபாரிகள் என்றுதான் கூற வேண்டும். மருத்துவர் என்று அழைப்பதற்கு தகுதியில்லாத பாவிகள்.

சில மருத்துவர்களும், சில பொதுமக்களும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுப்பதை ஒரு சாதனையைப் போன்றது பார்க்கிறார்கள். பெண்களே, தாய்மார்களே, உண்மையான நேர்மையான மருத்துவர்களே ஒன்றுமட்டும் நினைவில் கொள்ளுங்கள், கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு வயிற்றைக் கிழித்து (சிசேரியன்) குழந்தையை வெளியே எடுப்பது சாதனையல்ல, மருத்துவமுமல்ல.

நன்மையான ஒன்றை உருவாக்குவதுதான் சாதனை அழிப்பது அல்ல. எந்த வலியும் வேதனையுமில்லாமல் ஒரு பெண் அவள் குழந்தையை ஈன்றெடுக்க ஒருவர் வழிகாட்டினால் அவர் மருத்துவர். குழந்தை ஆரோக்கியமாக பிறக்க, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக வாழவும் வழிகாட்டினால் அவர் உண்மையான மருத்துவர்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலை, அல்லது தாயின் சேயின் உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடிய சூழ்நிலையில்லாமல் ஒருவன் ஒரு பெண்ணின் வயிற்றைப் பணத்துக்காக கிழிப்பானே ஆனால் அவன் மனிதனே அல்ல விலங்கினதைச் சார்ந்தவன். 

மருத்துவர்கள் என்று தங்கக்களை அடையாலப்படுத்திக் கொள்ளும் சில பெண்களும் பணத்துக்காக இன்னொரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவமும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெண் மருத்துவர்கள் தான் கண்களால் காணக்கூடிய பேய்களின் உருவங்கள்.

வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பப்பையை நீக்கிவிட்ட பெண்கள் அனுபவிக்கக் கூடிய வேதனைகள்.

1. குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் போகலாம்.
2. குழந்தைக்கு அச்ச உணர்வு அதிகமாக இருக்கலாம்.
3. தாய்க்கு கால்வலி, மூட்டுவலி, இடுப்புவலி, பிடரிவலி உண்டாகலாம்.
4. கால் வீக்கம் உண்டாகலாம், நடக்கச் சிரமம் உண்டாகலாம்.
5. அசீரணம் மற்றும் மலச்சிக்கல் உண்டாகலாம்.
6. கர்ப்பப்பை தொடர்புடைய பாதிப்புகள், வலிகள், கட்டிகள், உண்டாகலாம்.
7. சில வருடங்களுக்குப் பிறகு, சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உண்டாகலாம்.
8. இன்னும் பல தொந்தரவுகள் உண்டாகலாம்.

20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதற்காக வயிற்றைக் கிழிப்பவர்களே, கர்ப்பப்பையை நீக்குபவர்களே மேலே குறிப்பிட்ட அத்தனை வேதனைகளையும் அந்த தாய் தன் வாழ்நாள் முழுமைக்கும் அனுபவிக்க நேரிடும். அந்தப் பாவம் முழுவதும் உங்களையும் உங்களின் குடும்பத்தையும் தான் சேரும்.

சில பெண்கள் பிரசவ வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும், குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும், வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இதுபோன்று சிந்திக்கும் பெண்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள், ஒரு தடவை வேதனையை அனுபவிக்கக் கூடாது என்று எண்ணுவதால் நீங்கள் வாழ்நாள் முழுமைக்கும் மேலே குறிப்பிட்ட வேதனைகளை அனுபவிக்க நேரிடும். சிந்தித்துச் செயல்படுங்கள்.

விலங்குகள்கூட எவர் உதவியுமின்றி சுயமாகவும் ஆரோக்கியமாகவும் குட்டிகளை ஈன்றெடுக்கும் போது ஆறறிவு மனிதர்களான உங்களால் இயலாதா? யாரையும் நம்பாதீர்கள் ஆரோக்கியமாக உண்ணுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள், உடல் சொல்வதை மட்டுமே கேட்டு நடங்கள், எந்த மருந்து மாத்திரைகளும் உட்கொள்ளாதீர்கள்; வலி வேதனையின்றி ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்கும்.

மருத்துவ வியாபாரிகளே வேதனைகளை அனுபவிக்கும் பெண்களின் கண்ணீரும், வேதனையும், வேண்டுதலுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சும்மாவிடாது. திருத்தி பாவமன்னிப்பு தேடுங்கள்.

பல பெண்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனைகளின் விளைவாகவும் இனிமேல் இதுபோன்ற கொடுமைகள் பெண்களுக்கு நடக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரை அறத்தைப் பேணி தொழில் செய்யும் மருத்துவர்களுக்குச் சேராது.

To Top