மனிதர்களுக்கு தடைகளும் தடங்கல்களும் உண்டாவது எதனால்?

திருவிழாவிற்கு குழந்தையை அழைத்துச் செல்லும்போது, தகப்பன் குழந்தையின் கையை இறுகப் பற்றிக்கொள்வான். குழந்தை அதை ஒரு தடையாக எண்ணும், தான் நினைத்தவாறு விரும்பியவாறு ஓட முடியவில்லை, தான் விரும்பியவற்றை அனுபவிக்க முடியவில்லை என்று வருந்தும். தகப்பன் தன் கையை பிடித்திருப்பது தனது நலன் கருதி என்பதை குழந்தை உணராது.

திருவிழாவில் தொலைந்துவிடாமல் பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக தகப்பன் குழந்தையின் கையை பிடித்திருப்பதைப் போன்று, நாம் இந்த உலக மாயையில் தொலைந்துவிடாமல் இருப்பதற்காக இறைவன் நம் கரத்தை பற்றி இருக்கிறான். 

எனக்கு சுதந்திரமில்லை, என்னால் அதை அடைய முடியவில்லை, இதை அடையமுடியவில்லை, எனக்கு இது கிடைக்கவில்லை, அது நடக்கவில்லை, நான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிவதில்லை என்று புலம்புகின்றோம். நமது கரத்தை பற்றிருப்பது யார் என்பதை உணராமல். என்றோ செய்த நல்வினைகளின் காரணமாக இறைவன் உங்களை பாதுகாக்கின்றான் ஆனால் மாயையில் மயங்கி அதை குறை அல்லது பலகீனம் என்று எண்ணுகிறீர்கள். 

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இந்த உலகையே உங்கள் காலடிக்குள் அடக்கிவிடும் கரங்களுக்குச் சொந்தக்காரன், உங்களின் அற்ப ஆசைகளை நிறைவேற்ற மாட்டானா? அனைத்தும் உங்களின் சொந்த முயற்சியால் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், உங்களைப் பற்றிருப்பவனிடம், பற்றுடன் பணிவுடன் இறைஞ்சுங்கள், உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

அனைவருக்கும் இறைவன் போதுமானவன்

To Top