கோவிட்-19 மூன்றாவது உலகப்போர் -2

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் மலேசியாவில் ஒருவர் என்னைத் தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றுக்கு அறிகுறியாகக் கூறப்படும் அத்தனை அறிகுறிகளும் ஒரு வாரமாக என்னிடம் இருக்கிறது. வீட்டில் பிள்ளைகளும் பெரியவர்களும் இருப்பதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் வெளியில் தங்கியிருக்கிறேன். கோவிட்-19 தொற்றாக இருக்குமோ என்று அச்சமாக இருக்கிறது! மருத்துவமனைக்குச் செல்லலாமா வேண்டாமா? என்ற குழப்பத்துடன் இருக்கிறேன். இந்த உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருந்து ஏதாவது உள்ளதா? என்று கேட்டார்.

கிருமிகள் மற்றும் உடலைப் பற்றிய சில விளக்கங்களைக் கூறிவிட்டு, திரிகடுகு சூரணத்தை மருந்தாக, தினம் மூன்று வேலைகள் சாப்பிடுங்கள் என்றேன். காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலையும், மதியம் சாப்பாட்டுக்கு முன்பாக ஒரு வேலையும், இரவு உறங்குவதற்கு முன்பாக ஒரு வேளையும் வெந்நீரில் ஒரு டீக்கரண்டி திரிகடுகு சூரணம் உட்கொள்ள அறிவுறுத்தினேன்.

சில நாட்கள் கழித்து தொலைப்பேசியில் கேட்டபொழுது, முதல் நாள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு வேலை திரிகடுகு சூரணம் உட்கொண்டதும், மதியம் தொண்டைக்கட்டு குணமானது, அன்று மாலையே முழுமையாக அத்தனை தொந்தரவுகளும் மறைந்துவிட்டன என்றார். சாதாரணமாக நாம் சளிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் இயற்கை மற்றும் சித்த மருந்துகள் மூலமாகக் குணமாகக்கூடிய சாதாரண தொந்தரவுதான் கோவிட்-19 தொற்று என்பது.

நாளிதழ்களில் வெளிவந்த செய்தி:
அண்மையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொந்தரவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைச்சும், உலக நாடுகளும் அறிவித்த பின்பும், ஆங்கில மருத்துவர்கள் 2-3 லட்சங்களுக்கு என்ன மருத்துவம் செய்வார்கள்? இருக்கின்ற மருந்திலேயே குணமாகுமென்றால் கோவிட்-19 என்பது முன்பு இருந்துவந்த சாதாரண தொந்தரவுகள்தான், பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று நான் சொல்வது சரிதானே?

சுகப்பிரசவம் ஆகக்கூடிய பெண்களுக்குக்கூட வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் கேடுகெட்ட, மனசாட்சி இல்லாத சில மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருக்கும் இந்த நாட்டில், காய்ச்சலுக்கு 2 லட்சம் வாங்கலாம் என்றால் விடுவார்களா? 

சாதாரணமாக கோவிட்-19 நோய் அறிகுறிகளைப் பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரிலேயே பல லட்சங்களை சம்பாதிக்கக்கூடிய சந்தர்ப்பம், இதை 50 ரூபாய் மருந்தில் குணமாகிவிட விடுவார்களா? அதனால்தான் கோவிட்-19 நோய்க்கு மருந்து என்று யார் பேசினாலும் ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

கோவிட்-19னால் பாதிக்கப்பட்ட முதல் நாடு சீனா. அது முழுமையாக அந்தத் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டது. அந்த நாட்டு அரசாங்கம் நாங்கள் பாரம்பரிய இயற்கை மூலிகை மருந்துகளைக் கொண்டுதான் பெரும்பாலான நோயாளிகளைக் குணப்படுத்தினோம் என்று கூறும்பொழுது இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் இயற்கை பாரம்பரிய மருத்துவங்களை ஒதுக்குவது ஏன்? சோதனை முறையில் கூட இயற்கை மருத்துவங்களைப் பரிசோதித்துப் பார்க்க முன்வராதது ஏன்?

காரணம் மருத்துவ வியாபாரம் மற்றும் பணம். மனித உயிர்களைவிடவும் பணம் சம்பாதிப்பது அவ்வளவு முக்கியமா? இறைவன் என்று ஒருவர் இருக்கிறார்! நீங்கள் செய்யும் அத்தனை விஷயங்களும் உங்களுக்கும் உங்களின் தலைமுறைக்கும் திரும்பிவரும், என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.


To Top