மனிதர்களின் வாழ்க்கையில் எதனால் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன?

மனிதப் பிறவிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அதிகமான வேறுபாடுகள் உள்ளன. மற்ற எந்த உயிரினத்துக்கும் தன் வாழ்க்கையை தனது விருப்பம் போல வாழும் உரிமை கிடையாது. தனக்கு எது வேண்டும் வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையும் மற்ற உயிரினங்களுக்கு கிடையாது.

மனிதனுக்கு மட்டும், தன் வாழ்க்கையை தனது விருப்பம் போல் வாழும் உரிமையுள்ளதால்; அவன் வாழும் காலங்களில் அறியாமையினால் பல தவறுகளை செய்கிறான். 

இந்த உலக வாழ்க்கையும் மனித பிறப்பும் ஆன்மாவுக்கு பயிற்சியாக இருப்பதனால்; அவன் செய்த தவறுகளை திருத்துவதற்காக அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பில் ஏற்ற தாழ்வுகள் உருவாகின்றன.


To Top