ஜீவசமாதி என்றால் என்ன?

ஒரு ஆன்மா (உயிர்) இந்த உலகில் வாழ வேண்டுமென்றால் உடல் தேவை. உடல் அழித்துவிட்டால் உயிரால் இந்த உலகில் வாழ முடியாது. உடலைப் பிரிந்த உடல் அழிந்துவிடும், உடல் அழிந்தால் அந்த உடலுக்குச் சொந்தமான ஆன்மா ஆவியாக மாறிவிடும். ஆவியான ஆன்மா அதன் இஷ்டம் போல் இயங்க முடியாது. அதனால்…

நம் சித்தர்களும் ஞானிகளும் அவர்களுக்கு இந்த உலகில் கடமைகள் மீதமிருந்தும், ஆயுள் முடிவு நெருங்கிவிட்டால் அவர்களின் உடல் அழியாமல் இருக்க சில பயிற்சிகளையும் வழிமுறைகளையும் பின்பற்று தங்களின் உடலை அழியாமல் பாதுகாப்பார்கள்.

அந்த உடலைக் குறிப்பிட்ட நேரகாலத்தில் சமாதியில் வைத்து மூடிவிடுவார்கள். அவர்களின் உடலில் அசைவு இல்லாமல் இருந்தாலும் உயிர் அந்த உடலின் உள்ளேயே ஒடுங்கியிருப்பதால் அதற்கு ஜீவ சமாதி என்று பெயர் வைத்தார்கள். ஜீவசமாதியை அடைந்தவர்களின் நோக்கம் நிறைவேறும் வரையில் அந்த சமாதியில் உடலும் உயிரும் அழியாமல் இருக்கும்.

உலக வாழ்க்கையிலிருந்த போது அந்த சித்தர், ஞானி, மகான், என்னவெல்லாம் செய்தாரோ, அவருக்கு என்னவெல்லாம் ஆற்றல் இருந்ததோ அவை அத்தனையும் அந்த ஜீவசமாதியில் கிடைக்கும். ஜீவசமாதி என்பது உயிரோடிருக்கும் ஒரு மனிதனுக்கு சமமானதால், ஜீவசமாதிகளுக்கு கோவில்களை விடவும் ஆற்றலும் மரியாதையும் முக்கியத்துவமும் அதிகம்.

To Top