கொரோனா வைரஸ் ஒரு வியாபாரம் என்கிறார்களே அதில் என்ன வியாபாரம் உள்ளது?

கொரோனா வைரஸ் பீதியினால் மக்கள் பதட்டத்துடன் பொருட்களை வாங்குவார்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வியாபாரிகள் தேவையற்ற பொருட்களை அவர்கள்மீது திணிக்கலாம். பொருட்களின் உற்பத்தி குறைந்துவிட்டதால் பொருட்களின் விலையை வியாபாரிகள் விருப்பத்துக்கு ஏற்றலாம். உதாரணம் சொல்வதானால் ஒரு பெரிய நிறுவனம் 3 ஆண்டுகளில் ஈட்டும் லாபத்தை இந்த இரண்டு மாதங்களில் ஈட்டியிருப்பார்கள். முக கவசம், கையுறை, கைகழுவும் திரவம், கிருமி நாசினிகள் போன்றவற்றைத் தயாரிப்பவர்கள் தங்களின் 10 வருட வருமானத்தை இந்த இரண்டு மாதங்களில் எடுத்திருப்பார்கள்.

இந்த பொருளாதார நெருக்கடியில் பல சிறிய நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படலாம் அவற்றை பெரிய நிறுவனங்கள் கைபற்றிக் கொள்ளும். சிறிய நிறுவனங்களின் சந்தையும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குப் போய்விடும். பங்குச்சந்தை வீழ்ச்சியினால் சிறிய நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிடும். சிறிய நிறுவனங்களையும் போட்டி நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பெரிய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

To Top