வளையல்களும் கொலுசுகளும்

கைகளுக்கு வளையல்களும்
கால்களுக்கு கொலுசுகளும்
ஆசையாய் வாங்கித்தந்தது
அலங்காரத்துக்காக அல்ல

வளையல்களையும்
கொலுசுகளையும்
போலவே - என் மனதும்
உனக்காக துடித்துக்
கொண்டிருக்கிறது
என்பதை உணர்த்தத்தான்

வளையல்களும் கொலுசுகளும்
சிணுங்கும் போதெல்லாம்
மௌனமாக ஒருத்தன்
உனக்காக காத்திருக்கிறான்
என்பது நினைவிருக்கட்டும்

To Top