குழந்தைகளின் பிறவி நோய்களுக்கான காரணங்கள் என்ன?


இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகள் நோய்களுடனும், குறைகளுடனும் பிறப்பதற்கும்; குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் பல உடல் உபாதைகளுக்கு ஆளாவதற்கும், பெற்றக்  குழந்தைக்கு பால் சுரக்காமல் தாய்மார்கள் அவதிபடுவதற்கும், மிக முக்கிய காரணமாக இருப்பது, கர்ப்பக் காலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சத்து மாத்திரைகளே.

நம் வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள். நமது வாயும் வயிறும் குப்பைத் தொட்டிகள் அல்ல. நமது வாய் இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை உண்பதற்காகவும், நமது வயிறு இயற்கையால் வழங்கப்பட்ட உணவுகளை ஜீரணிப்பதற்காகவும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நமது வயிறு இரசாயனங்களைக் கொண்டு, செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளையும், மருந்துகளையும், பொருட்களையும் ஜீரணிக்காது.

அவ்வாறானால் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்துகள் என்னவாகும்?
நாம் உட்கொள்ளும் மருந்துகளில் உடலுக்கு உதவக்கூடிய விசயங்கள் ஏதாவது இருந்தால், அதை உடல் கிரகித்துக் கொண்டு மற்றவற்றை கழிவாக உடலிலிருந்து வெளியில் அனுப்பிவிடும். இவ்வாறு உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில், மிகக் கடுமையான, மிகக் கொடுமையான இரசாயனங்களை உடலால் வெளியேற்ற முடியாத சூழ்நிலையில், சில கழிவுகள் உடலுக்குள்ளேயே தங்கிவிடும். இவ்வாறு உடலுக்குள்ளேயே தங்கிவிடும் கழிவுகளே அனைத்து உடல் உபாதைகளையும் உருவாக்குகின்றன.

குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள்.
குழந்தைகளுக்கு உருவாகும் தொந்தரவுகள் பெரும்பாலும் தாயின் கர்ப்பப்பையிலேயே தொடங்குகின்றன. இயற்கையாகவே தாயின் கர்ப்பப்பையானது குழந்தை உருவாகவும், குழந்தை வளரவும் மிக பாதுகாப்பானதாக படைக்கப்பட்டிருக்கிறது.

தாயின் கர்ப்பப்பையானது, அதில் வளரும் குழந்தையின் அனைத்து நோய்களையும் நீக்கி, பரம்பரை நோய்கள் என்று கூறப்படும் நோய்கள் அண்டாமல் தடுத்து, வெளியிலிருந்து எந்த பாதிப்புகளும் குழந்தையை நெருங்காமல் பாதுகாக்கும் அமைப்பிலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

இறைவனுக்கு தெரியாதது மருத்துவர்களுக்கு தெரிந்துவிட்டது?
மிக அழகாக, மிக உன்னதமாக, இறைவன் படைத்த கர்ப்பப்பையில். எந்த ஒரு முன் மாதிரியும் இன்றி மிக உன்னதமான, மிக உயரிய படைப்பாக மனித இனம் படைக்கப்படுகிறது. இவ்வாறு இயற்கையின் கரங்களில் வளரும் குழந்தையை பிடுங்கி, நாங்கள் பாதுகாக்கிறோன் என்று கூறுபவர்களை நம்பி, அவர்கள் கொடுக்கும் இரசாயனங்களை உட்கொண்டு. பல தாய்மார்கள் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் சீரழிகிறார்கள்.

இரசாயனங்கள் உடலுக்கு கேடானவை.
கர்ப்பம் தரித்த தாய்மார்கள் அல்லது கர்ப்பம் தரிக்க ஆசைப்படும் தாய்மார்கள், எந்த காரணத்தைக் கொண்டும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. இரசாயனங்களை உணவாகவோ, பானமாகவோ, ஒப்பனையாகவோ, மருந்தாகவோ, ஊசியாகவோ எந்த வகையில் பயன்படுத்தினாலும். அது அந்த தாய்க்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கை விளைவிக்கும்.

கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள், அந்த தாயின் உடலையும் அவளின் கர்பப்பையையும் முழுமையாக செயல்பட விடாமல். அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கட்டுப் படுத்துகிறன.

ஒரு கர்ப்பமுற்ற தாய், இரசாயனங்களை உட்கொள்ளும் போது, அவளின் உடலானது அந்த  இரசாயனங்களை எதிர்த்து போராடுகிறது. உடலின் உள்ளே செல்லும்  இரசாயனங்களை முறிப்பதிலும், அதை வெளியேற்றுவதிலும், பெருமளவு சக்திகளை செலவழிப்பதால், அவள் கருவின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சக்தி போதாமல் குழந்தைக்கு குறைகள் உண்டாகின்றன.

கர்ப்பமுற்ற தாய்மார்கள் உட்கொள்ளும் இரசாயனங்கள்
பெரும்பாலும் கர்ப்பமுற்ற தாய்மார்கள் இரும்புச் சத்து, கல்சியம் சத்து, விட்டமின், க்லுகொஸ் போன்ற மருந்து மாத்திரைகளைச் உட்கொள்கிறார்கள். ஏன் உட்கொள்கிறார்கள் என்று கேட்டல், டாக்டர் பரிந்துரைத்தார்கள், குழந்தையின் ஆரோக்கியத்துக்காக என்று கூறுவார்கள். ஆனால் யாரும் டாக்டர்களை திரும்பி கேட்பதில்லை இந்த மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாக பிறந்த என் முன்னோர்கள் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள், ஆனால் இவற்றை உட்கொள்ள தொடங்கிய பிறகு பிறந்த மனிதர்கள் 60 வயதை தாண்டுவதே இயலாத காரியமாக இருக்கிறதே ஏன்? என்று.

நீங்கள் கேட்கலாம் விட்டமின், கல்சியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு அவசியம் தானே அவற்றை உட்கொள்வதினால் என்ன தவறு இருக்கிறது என்று. இயற்கையில், இயற்கையால் உருவாகும் கல்சியம், விட்டமின் போன்ற சத்துக்களுக்கும் டாக்டர்கள் கொடுக்கும், மருந்து கம்பனிகள் உருவாக்கும் செயற்கை சத்துக்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?. இயற்கையாக மண்ணில் விளைந்த மலர்களுக்கும், ப்லாஸ்திக் மலர்களுக்கும் உள்ள வித்தியாசம். இரண்டையுமே நாம் மலர்கள் என்றுதான் கூருகிறோம். ஆனால் உண்மையில் இரண்டும் ஒன்றல்ல.

இரசாயனங்களிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
கர்ப்பமுற்ற தாய்மார்கள் மட்டுமின்றி, யாருமே எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டமின், கல்சியம் போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகளையும், சோடியாம் கலந்த உப்புக்களையும் உட்கொள்ள வேண்டாம்.

ஆரோக்கியமாகவாழ்வோம்… ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம் ...


To Top