தியானம் என்பது என்ன?

தியானம் என்பது உடல், மனம், புத்தி மற்றும் உடலின் ஆற்றலைச் சீராகவும், நம் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும், அதேநேரத்தில் இந்த உலக வாழ்க்கையை விழிப்புணர்வோடு வாழ்வதற்கும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.

தியானம் என்பது மதங்களும், தெய்வங்களும், வழிப்பாட்டுகளும், சம்பந்தப்பட்ட விஷயமல்ல. உண்மையில் தியானம் என்பது மனிதனின் இயல்பான நிலையாகும். தாயின் கருவறையில் இருக்கும் போது நாம் தியான நிலையில் தான் இருந்தோம். பூமியில் பிறந்த புதிதிலும் தியான நிலையில் தான் இருந்தோம், மனம் வளர்த் தொடங்கியதும் நாம் படிப்படியாக தியான நிலையை விட்டு, மாயையில் சிக்கி உலக வாழ்க்கையில் நுழைந்தோம்.

மாயையிலிருந்து விடுபட்டு மீண்டும் நம் சுயத்தை உணர உதவும் வழிமுறைதான் தியானம்.

To Top