உன் நினைவு கொல்லுதடி

மல்லிகைப் பூச்சரமும்
பாவாடை தாவணியும்
சிணுங்கும் வளையல்களும்
சிரிக்கும் கொலுசுகளும்

நெத்தியிலே குட்டிப் பொட்டும்
ஒய்யார புன்சிரிப்பும் - உன்னை
தீண்டிய நானத்தினால்
உதிர்ந்துவிடும் மல்லிகையும்

எனக்கு முன் உன்னைச் சுமக்கும்
மின்னும் காலணியும்
குளுமையும் உஷ்ணமும் கலந்த
ஓரக் கண் பார்வைகளும்

கொல்லாமல் கொல்லுதடி
உன் நினைவு நித்தம் நித்தம்
கொத்திக் கொத்தி தின்னுதடி
என்னுயிரை மிச்சமின்றி

உயிர் வாழும் ஆசையுண்டு
உன்னோடு வாழ்வதென்றால்
இன்றே பிரியாட்டும்
நீயில்லா வாழ்கையென்றால்

Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.