என்னைக் கொல்லும் காதலே

தனிமை தவத்தால்
கொல்கின்றன - உன்
பூவும் பொட்டும்

ஓரப் பார்வையால்
கொல்கின்றன - உன்
கண்களிரண்டும்

சிரித்துச் சிதறி
கொல்கின்றன - உன்
உதடும் சிரிப்பும்

ஆடி அசைந்து
கொல்கின்றன - உன்
ஜிமிக்கியும் கம்மலும்

துள்ளிக் குதித்து
கொல்கின்றன - உன்
வளைவும் வளையலும்

காற்றில் தவன்று
கொல்கின்றன - உன்
பாவாடையும் தாவணியும்

சிணுங்கிச் சிரித்து
கொல்கின்றன - உன்
கொலுசும் மணியும்

தனிமையில் என்னை
கொல்கின்றன - உன்
குரலும் நினைவும்

To Top