மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்

பெரும்பாலும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு தவறுகளினால் சில பெண்கள் தங்களுக்குத் தாங்களே மார்பகப் புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். அன்றாடம் செய்யும் ஒரு சில தவறுகளைத் தவிர்த்தாலே மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் தவிர்க்கலாம்.

மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள்:
இறுக்கமான உடைகளை அணிவது. சிறிய அல்லது இறுக்கமான உள்ளாடைகளை (பிரா) அணிவது. கம்பி வைத்த அல்லது கடினமான பிராக்களை அணிவது. உறங்கும்போது பிராக்களை அணிந்து கொள்வது.

சிறிய அல்லது இறுக்கமான பிராக்களை அணியும்போது அவை இரத்தம், காற்று, மற்றும் சக்தி ஓட்டங்களைத் தடை செய்கின்றன. நமது சருமத்திற்கு மேலே உடலின் சக்தி நாளங்கள் உள்ளன. இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை அணியும்போது அவை சக்தி நாளங்களின் சக்தி ஓட்டங்களைத் தடை செய்கின்றன. சக்தி ஓட்டங்களில் தடைகள் ஏற்படும்போது, அந்த பகுதியில் உறுப்புகள் பலகீனமடையத் தொடங்குகின்றன. பலகீனமான உறுப்புகளில் அல்லது பகுதிகளில் கழிவுகள் தேங்கத் தொடங்குகின்றன.

இரண்டாவது காரணியாக இருப்பது இரசாயனங்களின் பயன்பாடாகும். பெரும்பாலான பெண்கள் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அது மட்டுமின்றி தனது அழகைக் கூட்டுவதாக நினைத்துக் கொண்டு பல இரசாயனம் கலந்த உணவுகளையும், மருந்துகளையும், பானங்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தாத இளம் பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து இளம் பெண்களும் அழகுசாதனப் பொருட்களைப்  பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சரி! நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன், பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் எவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன? ஒரு சிலர் இரசாயனங்கள் என்று பதில் கூறக்கூடும். இப்போது நான் அடுத்த கேள்வியை முன்வைக்கிறேன். இரசாயனங்கள் எவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன? பெண்கள் மட்டுமின்றி பெரும்பாலும் யாருக்கும் இதற்கான விடை தெரியாது என்று நான் நினைக்கிறேன்.

பெண்கள் மட்டுமின்றி இருபாலரும் பயன்படுத்தும் கிரீம், லோஷன், வாசனைத் திரவியம், கலர் பென்சில், லிப்ஸ்டிக், சோப்பு, ஷாம்பு, கண்டிஷனர், என அனைத்து அழகுசாதனப் பொருட்களும் இரசாயனங்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் சோப்பு போட்டு குளித்த பிறகு சோப்பின் வாசனை உங்களின் மீது வீசுகிறதா? இல்லையா? ஷாம்பு போட்டு குளித்த பிறகு அதன் வாசனை உங்கள் கூந்தலில் வீசுகிறதா? இல்லையா? நீங்கள் குளிக்கும் போது அவற்றை சுத்தமாக கழுவத் தானே செய்தீர்கள்? சோப்பு மற்றும் ஷாம்புவின் வாசனை உங்களின் தோலில் வீசுகிறது என்றால், என்ன அர்த்தம்?

ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நமது தோலில் சோப்பு, ஷாம்பு, மற்றும் எவற்றைப் பூசினாலும், அவை நமது தோலின் செல்களுக்குள் சென்றுவிடும். செல்களில் நுழைந்த காரணத்தினால் தான், அவற்றின் வாசனை சுத்தமாகக் கழுவியப் பிறகும் மிஞ்சி இருக்கின்றன.

சோப்பு, ஷாம்பு மட்டுமல்ல, ஒவ்வொரு கிரீமும், லோஷனும், வாசனை திரவியமும், இரசாயனத்தில் இருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு அழகுசாதனப் பொருளும் தோலுக்குள் ஊடுருவும். தோலுக்குள் ஊடுருவும் இரசாயனங்கள் உடலுக்குள் தேங்கத் தொடங்குகிறது. அவை தேங்கியிருக்கும் உறுப்பை பலவீனப்படுத்தி, நோய்களை உண்டாக்குகின்றன. தேங்கிய இரசாயனங்கள் வெளியேற முடியாத பொழுது, அவை புற்றுநோய் கட்டியாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஹார்மோன் மாத்திரைகள், அலோபதி மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், வைட்டமின்கள், சத்து மாத்திரைகள், சத்து மாவுகள், போன்றவற்றில் கலந்திருக்கும் இரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், பாட்டில்களில் அடைத்த பானங்கள், உணவு பொருட்களில் கலக்கப்படும் செயற்கை வர்ணம், வாசனை, சுவை போன்றவையும் புற்று நோய்களை உண்டாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

மார்பகப் புற்றுநோய் மட்டுமில்லாமல் பெண்களுக்கு உண்டாகக் கூடிய பெரும்பாலான நோய்களுக்கு மேலே உள்ள காரணங்கள்தான் முக்கியக் காரணியாக இருக்கின்றன. மேலே கூறப்பட்டவற்றைத் தவிர்க்கும் போது, நோய்கள் உண்டாகாமல் தவிர்த்து இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழலாம்.


To Top