கேள்வி பதில்
கேள்வி பதில்

தீட்சை பெற்ற பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்

தீட்சை பெற்ற பிறகு உடலில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இந்த மாறுதல்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபட்ட அனுபவமாக இருக்கலாம். அவர் அவர் உடல், மனம், ஆரா மற்றும் சக்திக்கு ஏற்ப மாறுதல்கள் உண்டாகலாம். 

1. உடலில் உஷ்ணம் அதிகரிக்கலாம்.
2. தோலில் சூடு, குளிர்ச்சி, அரிப்பு, இருக்கலாம்.
3. காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் உண்டாகலாம்.
4. தலைச் சுற்றல் அல்லது தலைவலி உண்டாகலாம்.
5. மலச்சிக்கல் அல்லது வயிற்று போக்கு உண்டாகலாம்.
6. இரவில் உறக்கம் கொள்ளாமல் சிரமப்படலாம்.
7. சளி, இருமல், உண்டாகலாம்.
8. இன்னும் மற்ற சில தொந்தரவுகளும் இருக்கலாம்.

தீட்சை பெற்ற மாணவர்கள் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றையோ அனுபவிக்கலாம். மேலே குறிப்பிட்ட தொந்தரவுகள் உண்டாக காரணமாக இருப்பது உடலின் சக்தி நிலையில் ஏற்படும் மாற்றங்கள். உடல் தன் கழிவுகளை நீக்கும் போதும், சக்தி நிலையை சமப்படுத்தும் போதும் இந்த அறிகுறிகள் தோன்றலாம்.

மேலே குறிப்பிட்ட தொந்தரவுகள் உண்டானால் அச்சப்படவோ மருத்துவம் செய்யவோ தேவையில்லை. வேலைகளையும் உணவையும் குறைத்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. ஓரிரு நாட்களில் அனைத்து தொந்தரவுகளும் குணமாகிவிடும்.

« PREV
NEXT »

1 comment