தீட்சைக்கு பின் செய்யக் கூடாதவை

ரெய்கி தீட்சை என்பது ஒரு மாயமோ மந்திரமோ கிடையாது. ரெய்கி தீட்சைக்கும் மற்ற அமானுஷ்ய சக்திகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதனால் எதாவது வினோதமாக நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். இப்போது இருப்பதை விடவும் வாழ்க்கை சற்று மேன்மையடையும் அவ்வளவுதான்.

நீங்கள் ஒன்றை நன்றாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். உங்கள் ஆற்றலும் உடலின் சக்தியும் முன்பு இருந்ததை விடவும் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவதால், நல்லதோ கெட்டதோ நீங்கள் எதை செய்தாலும் அதன் விளைவு கனமானதாக இருக்கும். அதனால் மனைவி, கணவன், பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது கோவப்படுவதோ, வன்முறையை கையாள்வதோ கூடாது. உங்கள் எண்ணங்களில் நினைப்பவை கூட பிறர் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்க கூடும், ஜாக்கிரதை.


Post a Comment

இந்த கட்டுரை தொடர்பான தங்களின் கருத்துக்களை மிகவும் எதிர்பார்க்கிறேன். கேள்வி, சந்தேகம், திருத்தம் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்.