கேள்வி பதில்
கேள்வி பதில்

ரெய்கியை தவறாக பயன்படுத்தாதீர்கள்

 சில மனிதர்கள் ரெய்கி ஆற்றலை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்வார்கள். பெண்களை கவர்வது, மக்களை ஏமாற்றுவது, செய்வினை செய்வது, பழிவாங்குவது, மனிதர்களை மயக்குவது, பேய் பிசாசு போன்றவற்றுடன் உறவாடுவது, மற்றும் மற்ற தவறான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆற்றலை பயன்படுத்த முயல்வார்கள்.

ஒருவர் இந்த ஆற்றலை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த முயற்சி செய்தால், அவரின் ரெய்கி ஆற்றல் குறைய தொடங்கிவிடும், பலகீனமாகும். ஒருவர் இந்த ஆற்றலை நன்மையான காரியங்களுக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்துவாரே ஆனால், அவரின் ஆற்றல் மேலும் வலிமையைப் பெறும். விரைவாகவும் சிறப்பாகவும் இலகுவாகவும் செயல்படும். இவர் நினைத்த மாத்திரமே இவர் நினைத்த விசயங்கள் நடக்க தொடங்கிவிடும். இது இயற்கையின் விதியாகும். 
« PREV
NEXT »

No comments